விஜய், விஷாலுடன் களத்தில் குதித்த சந்தானம்!

சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

செய்திகள் 29-Nov-2016 10:14 AM IST Chandru கருத்துக்கள்

படம் ஆரம்பித்தபோதே 2017 பொங்கல் ரிலீஸ் என்பதை அறிவித்துதான் களத்தில் குதித்தனர் நடிகர் விஜய்யும், இயக்குனர் பரதனும். அந்தவகையில், படத்தை திட்டமிட்டபடி ரிலீஸ் செய்ய பரபரப்பாக சுற்றிக்கொண்டிருக்கிறது ‘பைரவா’ டீம். விஜய்யைத் தொடர்ந்து விஷாலும் தனது ‘கத்தி சண்டை’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். நவம்பரில் வெளியாகவிருந்து, டிசம்பரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டு தற்போது பொங்கல் ரிலீஸ் என உறுதி செய்திருக்கிறது ‘கத்தி சண்டை’. இந்த இரண்டு படங்களோடு தற்போது மூன்றாவதாக சந்தானத்தின் ‘சர்வர் சுந்தரம்’ படமும் பொங்கல் ரேஸில் குதித்திருக்கிறது.

கெனன்யா ஃபிலிம்ஸ் தயாரிப்பில் தற்போது உருவாகிவரும் மூன்று படங்களை 45 நாட்களுக்கு வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம். டிசம்பர் 2வது வாரத்தில் தினேஷின் ‘உள்குத்து’ படத்தையும், அதனைத் தொடர்ந்து ஜி.வி.பிரகாஷின் ‘புரூஸ் லீ’ படத்தையும், பொங்கலுக்கு ‘சர்வர் சுந்தரம்’ படத்தையும் வெளியிடுவது எனத் தீர்மானிதிருக்கிறதாம் கெனன்யா ஃபிலிம்ஸ் நிறுவனம்.

#Santhanam #Bairavaa #Kaththisandai #Vishal #Vijay #ServarSundaram #KenanyaFilms #Dinesh #Ulkuthu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆக்‌ஷன் ட்ரைலர்


;