தமிழில் ‘நேரம்’ படம் வெளிவந்தபோதுகூட அத்தனை பெரிய அளவுக்கு ரசிகர்கள் நடிகர் நிவின் பாலியை கண்டுகொள்ளவில்லை. ஆனால், ‘பிரேமம்’ மலையாள படத்திற்குப் பிறகு அவருடைய நேரடித் தமிழ்ப்படம் வராதா என ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த ஏக்கத்தைப் போக்கும் வகையில், நிவின் பாலியை நாயகனாக்கி தன் அறிமுகப் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் கௌதம் ராமச்சந்திரன். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பு சமயத்தில், நடிகர் நிவின் பாலியை 100க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதை குறிப்பிட்டு பேசிய இயக்குனர், ‘‘இப்படி ஒரு சம்பவம் சென்னையில் நடந்திருந்தால் நான் பெரிதாக ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன். ஆனால், தூத்துக்குடியிருப்பவர்களுக்குக்கூட நிவின் இத்தனை பரிச்சயமாக இருக்கிறாரே என்பதுதான் மலைப்பாக இருக்கிறது’’ என்றார்.
அதோடு படத்தின் தலைப்பு ‘அவர்கள்’ என வைக்கப்பட்டிருப்பதாக சமீபத்தில் வந்த செய்திகளையும் மறுத்துள்ளார் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரன். விரைவில் இப்படத்தின் அதிகாரபூர்வ தலைப்பு அறிவிக்கப்படுமாம்.
#NivinPauly #Premam #GauthamRamachandran #Avargal #KBalachandar #Rajinikanth #Kamal Haasan #OruVadakkanSelfie
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...