மடோனா நடிப்பை யூனிட்டுடன் சேர்ந்து கைதட்டி ரசித்த கே.வி.ஆனந்த்!

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கவண்’ படத்தின் நாயகி மடோனாவிற்கு படக்குழு பாராட்டு

செய்திகள் 28-Nov-2016 5:58 PM IST Chandru கருத்துக்கள்

‘அனேகன்’ படத்திற்குப் பிறகு விஜய்சேதுபதி, மடோனா செபாஸ்டியன் நடிக்கும் ‘கவண்’ படத்தின் இறுதிகட்ட வேலைகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். டி.ராஜேந்தர், விக்ராந்த் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்திற்கு அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் 18வது படைப்பாக உருவாகி வரும் ‘கவண்’ படத்தின் நாயகி மடோனா செபாஸ்டியன் குறித்த சுவாரஸ்ய ட்வீட் செய்திருக்கிறார் இயக்குனர் கே.வி.ஆனந்த். அதில், ‘‘ஷாட் முடிந்த பின்பு நடிகர்களின் நடிப்பை நான் சிலாகிப்பதில்லை என்பது பொதுவாக என்பட நடிகர்கள் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த வாரம் நடிகை மடோனாவின் நடிப்பை மொத்த யூனிட்டும் கைதட்டி ரசித்தது. நானும்தான்!’’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்த ட்வீட்டைப் பார்த்த நடிகர் தனுஷ், வேடிக்கையாக... ‘‘உங்கள் பட நடிகர்களின் உணர்வுகளை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது சார்!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

#Kavan #KVAnand #MadonaSabastian #VijaySethupathi #AGSEntertainment #Anegan #Dhanush #Jagan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;