விகாஸ் பால் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற படம் ‘குயின்’. இப்படத்தில் நாயகியாக நடித்த கங்கனா ரெனாவத் ஃபிலிம் ஃபேர் மற்றும் தேசிய விருதுக்கான சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றியில் ஈர்க்கப்பட்ட இயக்குனரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இப்படத்தின் தென்னிந்திய மொழிகளுக்கான ரீமேக் உரிமையை வாங்கினார். இப்படத்தின் ரீமேக்கில் எந்த நாயகி நடிப்பார் என ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இப்படத்தின் தமிழ், மலையாளம், கன்னட மொழிகளுக்கான நாயகிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளனர்.
நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகும் ‘குயின்’ தமிழ் ரீமேக்கில் நாயகியாக தமன்னா நடிக்கிறார். மலையாளத்திற்கு அமலா பாலையும், கன்னடத்திற்கு பருல் யாதவையும் நாயகிகளாக ஒப்பந்தம் செய்திருக்கின்றனர். அனிஸ் குருவில்லா இயக்கத்தில் உருவாகும் ‘குயின்’ தெலுங்கு ரீமேக்கிற்கான நாயகி இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
#Tamannah #Queen #VikasPaul #AmalaPaul #KanganaRanaut #Thiagarajan #Revathi #ParulYadav
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறாக உருவாகி வரும் படம் ‘தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்கி...
சினிமாவை போல இப்போது வெப் தொடர்களுக்கும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இதனால்...
ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில்...