விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் - விமர்சனம்

‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்குமா’ன பஞ்சாயத்தில் சுவாரஸ்யமில்லை!

விமர்சனம் 28-Nov-2016 5:30 PM IST Top 10 கருத்துக்கள்

Direction : Vincent Selva
Production : Wow 4 Studios
Starring : Sanjay, Arundathi Nair, Thambi Ramaiah, Yogi Babu
Music : R Devarajan
Cinematography : SK Mitchell
Editing : Maruthi Krish

‘பிரியமுடன்’, ‘யூத்’, ‘ஜித்தன்’ உட்பட பல படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வாவின் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’.

கதைக்களம்

பணத்துக்கு ஆசைப்பட்டு ஏமாற்றுக்கார திரைப்பட இயக்குனர் தம்பிராமையாவிடம் மாட்டிக் கொள்கிறார்கள் படத்தின் கதாநாயகன் சஞ்சய்யும், அவரது நண்பர் முருகதாஸும். வித்தியாசமான முறையில் படம் எடுக்கிறேன் என்று கூறி படம் எடுக்கும் தம்பி ராமையா இயக்கத்தில் நடிக்க துவங்குகிறார்கள் இருவரும்! இப்படத்தில் கதாநாயகியாகும் அருந்ததி நாயர் ஊரில் இரு கோஷ்டிகளுக்கு இடையே ஏற்படும் பிரச்சனையால் தனது ஃபேஸ்புக் காதலனை சந்திக்க வீட்டை விட்டு ஓடி விடுகிறார். ஊர் பெரியவர் ஜோமல்லூரியின் மகளான அருந்ததி காணாமல் போன பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார் கதாநாயகன் சஞ்சய்! இந்த பிரச்சனையிலுருந்து சஞ்சய் எப்படி விடுப்பட்டு தான் நிரபராதி என்று நிரூபிக்கிறார் என்பதே ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ படத்தின் ஒரு வரிகதை!

படம் பற்றிய அலசல்

‘ஃபேஸ்புக்’ காதலில் ஒரு இளைஞரால் ஏமாற்றப்படும் ஒரு பெண்ணின் கதையை சொல்ல வந்திருக்கிறார் இயக்குனர் வின்சென்ட் செல்வா! ஆனால் அதற்கு தகுந்த மாதிரியான அழுத்தமான காட்சிகளை அமைத்து படமாக்க தவறியுள்ளார். வித்தியாசமான முறையில் படம் பிடிக்கிறேன் என்று சொல்லி படத்தின் இடைவேளை வரை தம்பி ராமையா நடத்தும் நாடகங்கள் நம்மை சோதிக்க வைக்கிறது! செய்யாத குற்றத்தில் மாட்டிக்கொள்ளும் சஞ்சய், தான் நிரபராதி என்று நிரூபிக்க களத்தில் இறங்குவதில் இருந்து படம் கொஞ்சம் சூடு பிடித்து, வித்தியாசமான கிளைமேக்ஸுடன் முடிவதால் பிற்பாதி கொஞ்சம் சுவாரஸ்யமாக இருக்கிறது.படத்தொகுப்பு, இசை, ஒளிப்பதிவு, காமெடி போன்ற எந்த விஷயங்களும் படத்திற்கு வலு சேர்க்காததால் ‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும்’ சுமாரான ஒரு படமாகவே அமந்துள்ளது.

நடிகர்களின் பங்களிப்பு

கதாநாயகானக நடித்திருக்கும் சஞ்சய் துறுதுறுவென்று இருக்கிறார். நடிப்பில் குறை வைக்கவில்லை என்றாலும் வலுவான கேரக்டர் அமையாததால் அவரது முயற்சி எடுபடவில்லை. கதாநாயகியாக வரும் அருந்ததி நாயர் தனக்கு தரப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளார். திரைப்பட இயக்குனராக வரும் தம்பி ராமையா வழக்கம் போல கத்தி பேசிகிட்டே இருக்கிறார். ஊர் பெரியவர்களாக வரும் ஜோ மல்லூரி, பாலா சிங், வில்லனின் அடியாளாக வரும் யோகி பாபு, போலீஸ் அதிகாரியாக வரும் ‘ரோபோ’ சங்கர், டான் ஆக வரும் மயில்சாமி, கேமராமேனாக வரும் அஸ்வின் என படத்தில் ஏராளமானோர் நடித்திருக்கிறார்கள்.

பலம்

ஓரளவுக்கு விறுவிறுப்பாக செல்லும் இரண்டாம் பாதி, கிளைமேக்ஸ்.

பலவீனம்

படத்தின் பெரும்பாலான விஷயங்களும் பலவீனமாகவே அமைந்துள்ளன!

மொத்தத்தில்…

இன்றைய ரசிகர்கள் விரும்பக் கூடிய புதிய விஷயங்களை கவனத்தில் கொள்ளாமல் எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை திருப்திப்படுத்துமா என்பது தெரியவில்லை!

ஒருவரி பஞ்ச் :‘விருமாண்டிக்கும் சிவனாண்டிக்குமா’ன பஞ்சாயத்தில் சுவாரஸ்யமில்லை!

ரேட்டிங் : 2.5/10

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

முந்தைய பதிவு

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பில்லா பாண்டி ட்ரைலர்


;