‘முன் தினம் பார்த்தேன்’, ‘டூ’, ‘எப்போதும் வென்றான்’ போன்ற படங்களில் நடித்த சஞ்சய் கதாநாயகனாக நடிக்கும் படம் திகில் படம் ‘தெரியும் ஆனா தெரியாது’. இவருடன் கதாநாயகியாக அறிமுகமாகிறார் தியா நாயர். ‘ஆர்.எஸ்.வின்னர் புரொடக்ஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பில் கே.என்.ராஜேஷ் தயாரிக்கும் இப்படத்தை யாழ் குணசேகரன் இயக்குகிறார். இந்த படம் குறித்து இயக்குனர் யாழ் குணசேகரன் கூறும்போது, ‘‘தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் கபிலன் அங்கு நடக்கும் சில பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சலிலிருந்து விடுபட, தன் தோழி மற்றும் நண்பர்களுடன் மலைப்பிரதேசத்திற்கு வருகிறார். அங்கு எதிர்பாரதவிதமாக பல அதிர்ச்சியான சம்பவங்கள் நடைபெறுகிறது. அந்த சம்பவங்கள் என்ன என்பது தான் படத்தின் திரைக்கதை. படு த்ரில்லிங்கான காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது’’ என்றார்.
இப்படத்தில் சஞ்சய், தியா நாயருடன் கே.என்.ராஜேஷ், ‘பிச்சைக்காரன்’ படப் புகழ் மூர்த்தி, சாம்ஸ், ‘பயில்வான்’ ரங்கநாதன் உட்பட பலர் நடிக்கின்றனர். அம்ரீஷ் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவை மனோஜ் பத்ரா கவனிக்கிறார்.
#TheriyumAanaTheriyathu #Sanjay #DiyaNair #YazhGunasekaran #Kabilan
‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் ‘தனுசு ராசி...
‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் படங்கள் தனுசு ராசி நேயர்களே,...
‘ஜாக்சன் துரை’ படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் இயக்குனர் தரணீதரனும், சிபி ராஜும் இணைகிறார்கள்...