சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘AK-57’. இந்த படத்தில் அஜித் இண்டர்போல் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த கேரக்டருக்காக அஜித் கடுமையான உடற்பயிற்சிகள் மேற்கொண்டு ‘ஃபிட்’டான கெட்-அப்பில் இருந்து வருகிறார். இந்த கெட்-அப் சம்பந்தமான அஜித்தின் ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியாகியிருந்தது. அஜித் ரசிகர்களை பெரிதும் உற்சாகமடைய வைத்த இந்த புகைப் படத்தை பார்த்த நடிகர் விக்ரம் பிரபுவும் ட்விட்டர் முலமாக அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் ‘AK-57’ படத்தில் அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன், விவேக் ஓபராய் முதலோர் நடித்து வர, அனிருத் இசை அமைக்கிறார்.
#AjithKumar #AK57 #VikramPrabhu #Ajith #KajalAggarwal #AksharaHaasan #VivekOberoi #Karunakaran #Anirudh
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மணிரத்னம் தயாரிப்பில், விக்ரம் பிரபு நடித்து நேற்று வெளியான படம் ‘வானம் கொட்டட்டும்’. இந்த படம்...