‘சபாஷ் நாயுடு’ கமல்ஹாசனின் புதிய பிளான்!

சபாஷ் நாயுடுவிற்காக டிசம்பர் 15-ல் களமிறங்கும் கமல்ஹாசன்!

செய்திகள் 28-Nov-2016 3:13 PM IST VRC கருத்துக்கள்

கமல்ஹாசனின் காலில் அடிப்பட்டத்தை தொடர்ந்து நின்று போன ‘சபாஷ் நாயுடு’ படத்தின் படப்பிடிப்பு மீண்டும் அடுத்த மாதம் 15-ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது. தற்போது ஓய்வில் இருந்து வரும் கமல்ஹாசன் ‘சபாஷ் நாயுடு’வின் அடுத்த ஷெட்யூல் படப்பிடிப்புக்கான வேலைகளையும் மும்முரமாக கவனித்து வருகிறாராம். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தின் இயக்குனர் பொறுப்பை முதலில் மலையாள இயக்குனர் டி.கே.ராஜீவ்குமார் ஏற்றிருந்தார். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே டி.கே.ராஜீவ்குமாருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் நடிப்புடன் இயக்குனர் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார் கமல்ஹாசன். அதனை தொடர்ந்து கமல்ஹாசன் இயக்கி வரும் ‘சபாஷ் நாயுடு’வின் அடுத்த கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டணத்தில் நடைபெறவிருக்கிறது. விசாகப்பட்டணம் படப்பிடிப்பு முடிந்ததும் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெறவிருக்கிறதாம். கமல்ஹாசனுடன் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மலையாள நடிகர் சித்திக் முதலானோர் நடிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசை அமைக்கிறார். லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.

#KamalHaasan #SabaashNaidu #Ilayaraja #ShrutiHaasan #RaajKamalFilms #Vishwaroopam2 #UttamaVillan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;