டூப் இல்லாமல் சந்தான்ம் போட்ட அதிரடி சண்டை!

‘ஓடி ஓடி உழைக்கணும்’ படத்திற்காக சந்தானம் போட்ட அதிரடி சண்டை!

செய்திகள் 28-Nov-2016 1:13 PM IST Top 10 கருத்துக்கள்

‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ என்ற தயாரிப்பு நிறுவம சார்பில் கே.எஸ்.சீனிவாவசன், கே.எஸ்.சிவராமன் இருவரும் இணைந்து தயாரித்து வரும் படம் ‘ஓடி ஓடி உழைக்கணும்’. இதில் சந்தானம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அமோரா தஸ்தர் நடிக்கிறார். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கும் இப்படத்தில் சந்தானம் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்திற்காக சமீபத்தில் அதிரடி சண்டை காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இந்த சண்டை காட்சியில் சந்தானம் டூப் இல்லாமல் நடித்து படக்குழுவினரை ஆச்சர்யப்பட வைத்துள்ளார். சண்டை காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக சந்தானம் மேற்கொண்ட முயற்சியாம் இது. ஒளிப்பதிவுக்கு கோபிநாத், இசைக்கு ஜிப்ரான் என்று கூட்டணி அமைத்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிற்து. இந்த படம் தவிர காளிதாஸ் ஜெயராம் நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் ‘ஒரு பக்க கதை’ என்ற படத்தையும் தயாரித்து வருகிறது ‘வாசன் விஷுவல் வென்சர்ஸ்’ நிறுவனம்.

#Santhanam #AmyraDustar #OdiOdiUzhaikanum #VaasanVisuals #Manikandan #Gopinath #Ghibran #BalajiTharanitharan #OruPakkaKathai

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;