சிங்கம் 3 - இசை விமர்சனம்

ஹாரிஸின் வெஸ்டன் ஸ்டைலில் ஹரியின் மாஸ் காப் ஆல்பம்தான் இந்த ‘எஸ் 3’.

இசை விமர்சனம் 28-Nov-2016 11:43 AM IST Chandru கருத்துக்கள்

கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப்பிறகு ‘எஸ்3’ படம் மூலம் மீண்டும் ஹரியுடன் இணைந்திருக்கிறார் ஹாரிஸ். இது ஹரியுடன் அவர் இணையும் 4வது படம். அதோட நாயகன் சூர்யாவுடன் ஹாரிஸ் ஜெயராஜ் இணையும் 8வது படம். சூர்யாவுடனும், ஹரியுடனும் ஹாரிஸ் இணைந்து பணியாற்றிய அத்தனை படத்தின் ஆல்பங்களுமே சூப்பர்ஹிட் வகையறா. இப்போது வெளிவந்திருக்கும் ‘சிங்கம் 3’ படத்திலும் அந்த மேஜிக் நிகழ்ந்திருக்கிறதா?

ஓ சோனே... சோனே
பாடியவர்கள் : ஜாவேத் அலி, ப்ரியா சுப்ரமணியம், எம்சி விக்கி
பாடலாசியர்கள் : பா விஜய், எம்சி விக்கி


ஹாரிஸின் வழக்கமான ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும் வெஸ்டன் குத்து ரகம் இந்த ‘ஓ சோனே... சோனே’. சூர்யாவின் ஓபனிங் பாடலாக இடம்பெறும் இப்பாடலுக்கு நீது சந்திராவின் டான்ஸ் ரசிகர்களுக்கு எக்ஸ்ட்ரா எனர்ஜி தரும். பாடலின் இடையிடையே வரும் எம்சி விக்கியின் ராப் வரிகளும், இசையும் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தியிருக்கிறது.

முதல் முறை...
பாடியவர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா, ஸ்வேதா மேனன், என்எஸ்கே ரம்யா, கார்த்திக்
பாடலாசியர்கள் : தாமரை, என்எஸ்கே ரம்யா


ஹாரிஸின் இசையில் ஏற்கெனவே பலமுறை கேட்ட ட்யூனிலேயே இந்த மெலடி பாடலும் உருவாக்கப்பட்டிருந்தாலும் பாடலை அற்புதமாகப் பாடியிருக்கும் பாடகர்களால் வெகுவாக கவர்கிறது. கூடவே, வரிகளை எழுதியிருப்பவர் தாமரை என்பதாலும் பாடலுக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது.

யுனிவர்சல் காப்...
பாடியவர்கள் : கிறிஸ்டோபர், தினேஷ் கனகரத்தினம், க்ரிஷ்
பாடலாசியர்கள் : விவேகா, தினேஷ் கனகரத்திரனம்


‘வேட்டையாடு விளையாடு’ ராகவன், ‘என்னை அறிந்தால்’ சத்யதேவைத் தொடர்ந்து ‘எஸ் 3’யின் துரைசிங்கத்திற்காக ஹாரிஸ் உருவாக்கியிருக்கும் ‘பாஸ்ட் ஃபேஸ்டு’ போலீஸ் பாடல்தான் இந்த ‘யுனிவர்சல் காப்’. துரைசிங்கத்தின் வெளிநாட்டு வேட்டைக்கு பின்னணி இசையாக பயன்படுத்தப்பட்டிருக்கலாம். காட்சிகளோடு பார்க்கும்போது கூடுதல் கவனம் கிடைக்கும். கிறிஸ்டோபர், தினேஷ் கனகரத்தினம் தங்களது பணிகளை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

ஹீ இஸ் மை ஹீரோ...
பாடியவர்கள் : மாளவிகா மனோஜ்
பாடலாசியர்கள் : ஹரி, மாளவிகா மனோஜ்


வரிகைளை எழுதி, இசை ஆல்பம் ஸ்டைலில் இப்பாடலைப் பாடியிருக்கிறார் மாளவிகா மனோஜ். ஆங்கில ஜாஸ் பாடலைப்போல் முழுப்பாடலுக்கும் ஒரேவித ‘பீட்’டில் இசையமைத்திருக்கிறார் ஹாரிஸ். பாடலின் இடையிடையே வரும் தமிழ் வரிகளை இயக்குனர் ஹரி எழுதியிருக்கிறார். மாளவிகாவின் குரல் பாடலுக்கு கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறது.

வை வை வை வைஃபை...
பாடியவர்கள் : கிறிஸ்டோபர், நிகிதா காந்தி
பாடலாசியர்கள் : ஹரி, ஹாரிஸ் ஜெயராஜ்


கார்த்திக் குரலில் வழக்கமாக உருவாக்கப்படும் ஹாரிஸ் ஸ்டைல் ‘பெப்பி நம்பர்’தான் இந்த ‘வை வை வை வைஃபை..’. பாடலின் சுவாரஸ்யமான விஷயம் என்வென்றால், அது நிகிதா காந்தியின் மயக்கும் குரல்தான். அவரின் மேக்னட் வாய்ஸ் கேட்பவர்களை கிறங்கடிக்கிறது. ஹரியும், ஹாரிஸும் இப்பாடலுக்கான வரிகளை எழுதியிருக்கிறார்கள் என்பது கூடுதல் ஆச்சரியம். ‘மாமாயோ...’, ‘கிலே கிலே கிலேக்கா....’ என அர்த்தமில்லா வார்த்தைகள் மூலம் பாடலை சுவாரஸ்யப்படுத்த முயன்றிருக்கிறார் ஹாரிஸ்.

மிஸன் டு சிட்னி...
பாடியவர் : லேடி காஷ்
பாடலாசியர்கள் : ஹரி, லேடி காஷ்


ஆல்பத்தில் இடம்பெற்றிருக்கும் இன்னொரு ‘மான்டேஜ்’ காட்சிகளுக்கான மாஸ் பாடல் இந்த ‘மிஸன் டு சிட்னி’. துரைசிங்கம் ரசிகர்களுக்காகவே வரிகளை லேடி காஷ் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் ஹரி. கேட்பதைவிட, இப்பாடலை பெரிய திரையில் பார்ப்பதுதான் இன்னும் எனர்ஜியாக இருக்கும் எனத் தோன்றுகிறது.

எஸ்3 தீம்...
பாடியவர் : எம்சி விக்கி
பாடலாசியர் : ஹரி


ஜெட் வேகத்தில் பயணிக்கும் இந்த தீம் இசையை ‘எஸ்3’யின் டீஸரிலேயே பலமுறை கேட்டுவிட்டதால், பரிச்சயம் காரணமாக கேட்டதும் உற்சாகம் தொற்றிக் கொள்கிறது. டிஎஸ்பி பாடியதுபோல் இருக்கிறது எம்சி விக்கியின் குரல்.

ஹரி படங்களைப் பொறுத்தவரை மல்டிப்ளக்ஸ் ரசிகர்களைவிட, பி அன்ட் சி ரசிகர்களிடமே மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும். அதனாலேயே அவர் படங்கள் பெரிய அளவிலான வசூலைக் குவிக்கின்றன. அதிலும் சிங்கம், சிங்கம் 2 இரண்டு படங்களுமே சூப்பர்ஹிட் ரகம். அவரின் அந்த ரசிகர்களை குறிவைத்தே இந்த 3ஆம் பாகத்திற்கான பாடல்களையும் கமர்ஷியல் மாஸாக உருவாக்கியிருக்கிறது ஹரி, ஹாரிஸ் கூட்டணி. ஆல்பத்தின் மற்ற பாடல்களைவிட ‘ஓ சோனே...’, ‘முதல் முறை’ பாடல்கள் பெரியளவில் கவரப்படும்.

மொத்தத்தில்... ஹாரிஸின் வெஸ்டன் ஸ்டைலில் ஹரியின் மாஸ் காப் ஆல்பம்தான் இந்த ‘எஸ் 3’.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;