‘சைவ கோமாளி’ பட விழாவில் வாகன ஓட்டிகளுக்கு வேண்டுகோள் விடுத்த கானா பாலா!

புதியவர்களுக்காக பாடல் வாய்ப்புகளை தவிர்க்கிறேன் –  ‘சைவ கோமாளி’ விழாவில் கானா பாலா!

செய்திகள் 28-Nov-2016 11:32 AM IST VRC கருத்துக்கள்

‘சைவ கோமாளி’ என்ற படத்திற்காக ஆம்புலன்ஸ் பற்றி ஒரு பாடல் எழுதி பாடியிருக்கிறார் கானா பாலா. இயக்குனர் தரணியிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரமேஷ் சீதாராம் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது கனா பாலா பேசும்போது.

‘‘நான் இதுவரை பல படங்களுக்கு பாடல் எழுதி பாடியிருக்கிறேன். அதைப் போல இப்படத்திற்காகவும் ஒரு பாடலை எழுதி பாடியுள்ளேன். இது ஆம்புலன்ஸ் பற்றிய ஒரு விழிப்புனர்வு பாடல்! பெரும்பாலும் ரோட்டில் ஆம்புலன்ஸ் வண்டி வேகமாக செல்லும்போது, சீக்கிரமாக சென்று விடலாம் என்று அந்த வண்டியை பின் தொடர்ந்து நிறைய பேர் வேகமாக வண்டியை ஓட்டி செல்வார்கள். அப்படி செல்லக் கூடாது! அப்படி போகும்போது அவர்களுக்கும் விபத்து ஏற்பட்டு அந்த ஆம்புலன்ஸில் போக வேண்டிய நிலை உருவாகலாம்! அதைப் போல ஆம்புலன்ஸ் வண்டி வரும்போது அதில் யார் இருக்கிறார்கள் என்றும் எட்டி பார்ப்பார்கள. அதில் நோயாளிகள் யாரும் இல்லை என்றால் அதற்கு வழி விடமாட்டார்கள். அப்படியும் செய்யக் கூடாது. ஏனென்றால் ஒருவரை காப்பாற்றத்தான் அந்த வண்டி வேகமாக சென்று கொண்டிருக்கும். அப்படி செல்கிற வண்டியை செல்ல விடாமல் தடுத்தால் சிலரது உயிரை காப்பாற்ற முடியாமல் போய் விடும். அதனால் யாரும் ஆம்புலன்ஸ் வண்டிக்கு பின்னாடி வேகமாக செல்லாதீர்கள், ஆள் இல்லாத வண்டிக்கும் வழி விடுங்கள்! இதை நான் ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.

நான் எழுதும் ஒவ்வொரு பாடலிலும் முடிந்தவரை மக்களுக்கு தேவையான கருத்துக்களை சொல்ல முயற்சிக்கிறேன். அதைப் போல இந்த ஆம்புலன்ஸ் பாடலிலும் கருத்தை சொல்லியிருக்கிறேன். சமீபகாலமாக நான் பாடல் வாய்ப்புகளை தவிரித்து வருகிறேன். ஏனென்றால் புதிதாக வருபவர்களுக்கும் பாடல் எழுதவும், பாடவும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக தான்’’ என்றார் கானா பாலா!

கணேஷ் ராகவேந்திரா இசை அமைத்திருக்கும் ‘சைவ கோமாளி’ படத்தில் புதுமுகம் ரஞ்சித் ராஜ்குமார் கதாநாயகனாக நடிக்க, ரெஹானா கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘எஸ்.எம்.எஸ்.மூவீஸ்’ நிறுவனம் சார்பில் ஏ.சி.சுரேஷ், மகேந்திரன், சாய் மகேந்திரன் ஆகிய மூன்று பேர் இணைந்து தயாரித்துள்ளனர். இவ்விழாவில் இயக்குனர்கள் சமுத்திரக்கனி, பேரரசு, திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பி.எல்தேனப்பன், கதிரேசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

#SaivaKomali #GnanaBala #Perarasu #Samuthirakani #SureshSeetharam #SMSMovies #Mahendiran

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;