கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்குப் பிறகு ஆர்.பார்த்திபன் இயக்கி வரும் படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. தனது குருநாதர் கே.பாக்யராஜின் மகனும், நடிகருமான சாந்தனுவை இப்படத்தில் ஹீரோவாக்கியிருக்கிறார் பார்த்திபன். சாந்தனுவுக்கு ஜோடியாக பார்வதி நாயர் நடிக்கும் இப்படத்தில் பார்த்திபனும் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறார். இவர்களுடன் தம்பி ராமையா, சிம்ரன் போன்றோரும் நடிக்கிறார்கள். அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சி சத்யா இசையமைக்கிறார்.
தனது முந்தைய படத்தைப்போலவே ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்திலும் ஸ்பெஷல் பாடல் ஒன்றை படத்தில் இடம்பெறச் செய்யவிருக்கிறார் பார்த்திபன். குத்துப்பாடலாக உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்க, அருண் விஜய், இனியா, சாந்தனு ஆகியோர் ‘டான்ஸ் மூவ்மென்ட்’ செய்யவிருக்கிறார்கள். டிஆரின் குரலில் உருவாகியிருக்கும் இப்பாடலுக்கான படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் துவங்குமாம்.
#Parthipan #ArunVijay #PrabhuDeva #KodittaIdangalaiNirapuga #ShanthanooBhagyaraj #ParvathiNair #ThambiRamaiha #Simran
அருண் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’மாஃபியா’. இந்த படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போதே,...
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...
சுந்தர்.சி இயக்கிய ‘முறை மாப்பிள்ளை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் அருண்...