மூன்றாவது முறையாக படத்தலைப்பில் ரஜினி டச்!

மனிதன். சரவணன் இருக்க பயமேனை தொடர்ந்து ரஜினி பட டச்சில் மீண்டும் உதயநிதி ஸ்டாலின்!

செய்திகள் 28-Nov-2016 10:52 AM IST VRC கருத்துக்கள்

‘மனிதன்’ படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கௌரவ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம், எழில் இயக்கத்தில் ‘சரவணன் இருக்க பயமேன்’, அறிமுக இயக்குனர் தளபதி பிரபு இயக்கத்தில் ஒரு படம் என்று 3 படங்களில் நடித்து வருகிறார். இதில் எழில் இயக்கும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு 50 சதவிகிதம் முடிந்துவிட்ட்து என்று கூறப்படுகிறது. கௌரவ் நாராயணன் இயக்கத்தில் வளர்ந்து வரும் படத்திற்கு இன்னும் பெயர் வைக்கப்படவில்லை. ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனம் தயாரிப்பில் தளபதி பிரபு இயக்கும் படத்திற்கு ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்று (27-11-16) உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள்! இதனை முன்னிட்டு ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ரஜினி நடித்த ‘மனிதன்’ பட தலைப்பை தனது படத்திற்கு தலைப்பாக்கிய உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது முறையாக ‘சரவணன் இருக்க பயமேன்’ என்று ரஜினி பட வசனத்தை தனது படத்திற்கு தலைப்பாக்கினார். இப்போது மூன்றாவது முறையாக ‘பொதுவாக என் மனசு தங்கம்’ என்ற ரஜினி படப்பாடல் வரியை தனது படத்திற்கு தலைப்பாக்கியுள்ளார். டி.இமான் இசை அமைக்கும் ‘பொதுவாக என் மனசு தங்கம்’ படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக ‘ஒரு நாள் கூத்து’ படப் புகழ் நிவேதா பெதுரார் நடிக்கிறார்.

#PodhuvagaEmManasuThangam #UdhayanidhiStalin #ThalapathyPrabhu #SriThenandalFilms #Manithan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிமிர் - நெஞ்சில் மாமழை வீடியோ பாடல்


;