இளையராஜாவிடம் கோரிக்கை வைத்த இயக்குனர்கள் கரு.பழனியப்பன், பேரரசு!

ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசைஞானியை மிஞ்ச முடியாது! – ராணி விழாவில் பேரரசு!

செய்திகள் 28-Nov-2016 10:15 AM IST VRC கருத்துக்கள்

சமுத்திரக்னியிடம் உதவியாளரக பணிபுரிந்த் பாணி இயக்கியுள்ள படம் ‘ராணி’. இளையராஜா இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இளையராஜா, ‘ராணி’யில் கதையின் நாயகியாக நடித்த தன்ஷிகா, இயக்குனர்கள் பாணி, சமுத்திரக்கனி, கரு பழனியப்பன், பேரரசு, எஸ்.ஆர்.பிரபாகரன், நமோ நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‘ராணி’யில் நடித்தது குறித்து தன்ஷிகா பேசும்போது, இந்த படத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசையில் நடிப்பது பெருமையாக உள்ளது. நான் இப்படத்தில் நடிப்பதற்கு மிக முக்கியமான காரணம் இயக்குநர் சமுத்திரகனி அவர்கள் தான்.அவர் கூறியதால் தான் இப்படத்தில் நடித்தேன்’’ என்றார்.

கரு.பழனியப்பன் பேசும்போது, ‘‘நான் இதுவரை யாரிடமும் கோரிக்கைகள் ஏதும் வைத்ததில்லை. ஏனென்றால் கோரிக்கைகள் வைத்தால் ஏதாவது பிரச்சனை வரும். அதனால் தான். ஆனால் இப்போது முதன் முறையாக இசை ஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று ஒரு படத்துக்கு முழுமையாக இசையமைக்க வேண்டும். ஏனென்றால் பல வருடங்களுக்கு முன் அவர் இசையமைத்த படங்களையே நாம் இன்று வரை கேட்கிறோம். அப்படி இருக்கும்போது அவர் இந்த காலகட்டத்துக்கு ஏற்றவாறு இசையமைக்கும்போது அது பல ஆண்டுகள் தாண்டி அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு கார்த்திக் ராஜாவிடமும், யுவன் ஷங்கர் ராஜாவிடமுக் ஒரு கோரிக்கை உண்டு. இளையராஜா அவர்கள் இது வரை இசையமைத்த படங்களின் தொகுப்பை உருவாக்க வேண்டும். மற்றொன்று ஒட்டு மொத்த திரையுலகத்தையும் ஒன்று திரட்டி அவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டு விழா நடத்த வேண்டும் என்பது தான் அது’’ என்றார்.

இயக்குநர் பேரரசு பேசும்போது, ‘‘நான் வாழ்நாளில் இரண்டே இரண்டு பேரை பார்த்து தான் பொறாமை பட்டுள்ளேன். ஒன்று என்னுடைய முன்னாள் காதலியின் கணவர் மீது! மற்றொன்று இசை ஞானி இளையராஜா அவர்கள் இசையில் படம் இயக்கும் இயக்குநர்கள் மீது! அந்த விதத்தில் எனக்கு இயக்குநர் பாணி மீது மிகப்பெரிய பொறமை உண்டு. எனக்கும் இசைஞானி இளையராஜா அவர்களிடம் ஒரு கோரிக்கை உண்டு! அவர் இது போன்ற பாடல்களை தான் உருவாக்க வேண்டும் என்பது தான் அது. கரு. பழனியப்பன் கூறியது போல் அவர் யுவன் ஷங்கர் ராஜா போன்று பாடல்களை உருவாக்க வேண்டாம். என்றும் உலகத்தில் ஒரே ஒரு இளையராஜா தான்! ஆயிரம் யுவன் ஷங்கர் ராஜாக்கள் வந்தாலும் இசை ஞானி இளையராஜாவை மிஞ்ச முடியாது’’ என்றார்.

#Rani #Dhansikaa #Ilayaraja #YuvanShankarRaja #KaruPazhaniyappan #Bharani #MuthuKrishnan #Perarasu #RaniAudiolaunch

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;