‘பைரவா’வில் விஜய்யின் அதிரடி நடனம் : சந்தோஷ் நாராயணன் ட்வீட்!

‘பைரவா’ படத்திற்கு இசையமைக்கும் சந்தோஷ் நாராயணன் பாடல்கள் குறித்தும், விஜய்யின் டான்ஸ் குறித்தும் ட்வீட்

செய்திகள் 26-Nov-2016 1:43 PM IST Chandru கருத்துக்கள்

பொங்கல் வெளியீடை குறிவைத்து பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது ‘பைரவா’ டீம். ‘பைரவா’ டீஸருக்கான பார்வையிடல்கள் ஒரு கோடியைத் தாண்டியிருப்பதால் உற்சாகத்திலிருக்கிறார் இயக்குனர் பரதன். டீஸருக்குக் கிடைத்த அதே வரவேற்பு படத்தின் பாடல்களுக்கும், டிரைலருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையும் அவருக்கு ஏற்பட்டுள்ளதாம். டிசம்பர் 2வது வாரம் ‘பைரவா’ பாடல்களை வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். இந்நிலையில், ‘பைரவா’ பற்றி இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளது, ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘‘பைரவா பற்றிய உற்சாகமான அப்டேட். விஜய் பாடிய பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளோம். நம்பமுடியாத அளவிற்கு நன்றாகப் பாடியுள்ளார். இப்பாடலுக்கு பூமியை அதிரச் செய்யும் விஜய் நடனத்திற்கு உத்திரவாதம்!’’ என்று ட்வீட் செய்துள்ளார் சந்தோஷ் நாராயணன்.

#Bairavaa #Vijay #KeerthySuresh #Bharathan #VijayaProduction #SanthoshNarayanan #Sathish #JagapathiBabu

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;