கௌதம் மேனன் இயக்கத்தில் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ என்ற ஒரு படம் உருவாகி வரும் நிலையில் ‘8 தோட்டக்கள்’ என்ற பெயரிலும் ஒரு படம் உருவாகி வருகிறது. இயக்குனர் மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அனுபவம் பெற்ற ஸ்ரீகணேஷ் இயக்கும் இப்படத்தில் புதுமுகம் வெற்றி கதாநாயகனாக நடிக்கிறார். ‘மகேஷின்டெ பிரதிகாரம்’ மலையாள படப் புகழ் நடிகை அபர்ணா முரளி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் முடிந்து விட்டு, படக்குழுவினர் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் மும்முரமாகியுள்ளனர். துப்பாக்கி, தோட்டாக்கள் என்பது குறி தவறக் கூடாது என்பதை வலியுறுத்தும் வார்த்தைகளாகும். அதைப் போல ‘8 தோட்டாக்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை குறித்த நேரத்தில் எடுத்து முடித்து அந்த வார்த்தைக்கு கௌரவம் சேர்த்துள்ளனர் இப்படக் குழுவினர். ‘வெற்றிவேல் சரவணா ஃபிலிம்ஸ்’ சார்பில் வெள்ளையா பாண்டியன் தயாரித்து வரும் இப்படத்தில் இணை தயாரிப்பாளராக ‘பிக் பிக்சர்ஸ்’ ஐ.பி.கார்த்திகேயனும் கை கோர்த்துள்ளார். நாசர், எம்.எஸ்.பாஸ்கர், டி.சிவா, ‘மைம்’ கோபி முதலானோரும் நடிக்கும் இப்படத்திற்கு கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசை அமைக்கிறார். பரபரப்பான காட்சிகளுடன் ஒரு த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது ‘8 தோட்டாக்கள்’ என்கிறார் இயக்குனர் ஸ்ரீகணேஷ்.
#8Thottakkal #Mysskin #SriGanesh #Vetri #AparnaMurali #VetrivelSaravanaFilms #VelliyaPandian
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...
ரெக்லஸ் ரோசஸ் நிறுவனம் தயாரிப்பில் பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பாரம்’ கடந்த...