2016-ல் சிவகார்த்திகேயனுக்கு இரண்டாவது 50 நாள் படம்!

சிவகார்த்திகேயனின் வெற்றியில் ரஜினி முருகனை தொடர்ந்து ரெமோ!

செய்திகள் 25-Nov-2016 11:00 AM IST VRC கருத்துக்கள்

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த மாதம் 7-ஆம் தேதி வெளியான படம் சிவகார்த்திகேயனின் ‘ரெமோ’. அறிமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் தனது ‘24 ஏ.எம்.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்த இப்படம் வெளியாகி பல்வேறு வகையிலான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், ரசிகர்கள் இப்படத்திற்கு வரவேற்பு கொடுத்து வெற்றிப் படமாக்கினர். ‘ரெமோ’விற்கு முன் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி 50 நாட்களுக்கும் மேல் ஓடி வெற்றி பெற்ற ‘ரஜினி முருகன்’ படத்தைப் போலவே இப்போது ‘ரெமோ’வும் 50 நாட்களை கடந்து தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் ஒரு படம் வெளியாகி ஒரு வாரம் ஓடினாலே அது வெற்றிப் படம் என்று விளம்பரப்படுத்தி வரும் நிலையில் ‘ரெமோ’ 50 நாட்களை கடந்திருப்பது ‘ரெமோ’ குழுவினருக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும். தமிழ் ‘ரெமோ’ 50 நாளை எட்டியுள்ள நிலையில் தெலுங்கு மொழியில் இப்படம் இன்று வெளியாகியுள்ளது. தெலுங்கில் வெளியாகியுள்ல ‘ரெமோ’விற்கு அங்கு எந்த மாதிரியான வரவேற்பு கிடைக்கும் என்பது வரும் நாட்களில் தெரிந்து விடும்!

#Remo #SivaKarthikeyan #24AMStudios #KeerthySuresh #Anirudh #RDRaja #RajiniMurugan #Saranya #Ponram

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;