துபாய் விழாவில் மீரா கதிரவனின் ‘விழித்திரு’

பாடல் வெளியீட்டுக்காக துபாய் செல்லும் ‘விழித்திரு’ படக்குழுவினர்!

செய்திகள் 24-Nov-2016 3:14 PM IST VRC கருத்துக்கள்

’அவள் பெயர் தமிழரசி’ திரைப்படத்தை இயக்கிய மீரா கதிரவன் இயக்கி வரும் படம் ‘விழித்திரு’. கிருஷ்ணா, விதார்த், வெங்கட் பிரபு, தம்பி ராமையா, எஸ்.பி.பி.சரண், தன்ஷிகா, அபிநயா, ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணாண்டஸ், பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் பலர் நடிக்கும் இந்த படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் சத்யன் மகாலிங்கம் இசை அமைக்கிறார். இந்த படத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பாடக் கூடிய வகையில் ஒரு பாடல் இடம் பெறுகிறது. 'STAY AWAKE' என்று துவங்கும் இந்த பாடலை நாளை (25-11-16) துபாயில் நடைபெறவிருக்கும் அபிராமி ராமநாதனின் ‘அபிராமி மெகாமால் விருது’ வழங்கும் விழாவில் வெளியிடவிருக்கின்றனர். இதற்காக ‘விழித்திரு’ படக்குழுவின் துபாய் பயணமாகியுள்ளனர். துபாய் நாட்டில் வெளியிடப்படும் இந்த பாடல் வருகிற புத்தாண்டு தினத்தில் அனைவரும் பாடி கொண்டாடப்படும் பாடலாக அமையும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர் ‘விழித்திரு’ படக்குழுவினர். இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

‘மெயின் ஸ்ட்ரீம் சினிமா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் மீரா கதிரவனும் அவரது நண்பர்களும் இணைந்து தயாரித்துள்ள விழித்திரு படத்தின் ஒளிப்பதிவை விஜய் மில்டன், ஆர்.வி.சரண் கவனித்துள்ளனர். கலை இயக்கத்தை எஸ்.எஸ்.மூர்த்தியும், எடிட்டிங்கை கே.எல்.பிரவீனும் கவனிக்கிறார்கள்.

#MeeraKathiravan #AvalPeyarThamizharasi #Jai #Vizhithiru #Krishna #Viddarth #VenkatPrabhu #ThambiRamaiah #SathyanMahalingam

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;