விஷ்ணு - அமலா பால் : ‘முண்டாசுப்பட்டி’ இயக்குனரின் த்ரில்லர் காம்போ!

‘முண்டாசுப்பட்டி’ இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் த்ரில்லர் படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் அமலா பால்

செய்திகள் 24-Nov-2016 10:26 AM IST Chandru கருத்துக்கள்

‘அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் அமலா பால்’ என இரண்டு நாட்களுக்கு முன்பு செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது மேலும் ஒரு புதிய தமிழ் படத்தில் ‘கமிட்’டாகியிருக்கிறார் அமலா. திருட்டுப்பயலே 2, விஐபி 2, வடசென்னை படங்களைத் தொடர்ந்து அவர் ஒப்பந்தம் செய்ப்பட்டிருக்கும் இந்த 4வது படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ‘முண்டாசுப்பட்டி’ படத்தைத் தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் இந்த புதிய படம் த்ரில்லராக உருவாகவிருக்கிறதாம்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரிக்கும் இந்த பெயரிடப்படாத புதிய படத்தில் விஷ்ணு போலீஸாக நடிக்கிறார். இதுவரை தமிழ் சினிமாவில் வெளிவராத புதிய வில்லன் கதாபாத்திரம் ஒன்றிற்கான புதுமுக நடிகர் தேர்வு நடைபெற்று வருகிறதாம். ஜிப்ரான் இசையமைக்கும் இப்படத்திற்கு சங்கர் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை கவனிக்கிறார் கோபி. ‘முண்டாசுப்பட்டி’ படத்தில் காமெடியர்களாக நடித்த காளி வெங்கட், ராம்தாஸ் இருவரும் இப்படத்திலும் நடிக்கிறார்களாம். வரும் 29ஆம் தேதி சென்னையில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது.

#Mundasupatti #VishnuVishal #AmalaPaul #AxessFilmFactory #Ghibran #Ramkumar #ThiruttuPayale2 #VIP2

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;