ஒளிப்பதிவாளர் சங்கம் புகார் எதிரொலி - ஃபெப்சி அமைப்பினர் ஒரு நாள் வேலை நிறுத்தம்!

ஒளிப்பதிவாளர் சங்க புகாரை கண்டித்து ஃபெப்சி அமைப்பினர் வேலை நிறுத்தம்!

செய்திகள் 24-Nov-2016 10:07 AM IST VRC கருத்துக்கள்

திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் அதன் தலைவர் பி.சி.ஸ்ரீராம் ஃபெப்சி அமைப்பின் தலைவர் ஜி.சிவா மீது போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று முன் தினம் புகார் ஒன்று அளிக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் சங்கம் ஜி.சிவா மீது அளித்த இந்த புகாரை தொடர்ந்து அதனை கண்டிக்கும் வகையில் ஃபெப்சி அமைப்பினர் இன்று (24-11-16) ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர். இது சம்பந்தமாக ஃபெப்சி அமைப்பு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘‘தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஜி.சிவா அவர்கள் மீது தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கம் அபாண்டமாக குற்றம் சாட்டி கவல் துறையில் புகார் வழங்கியதை கண்டித்து தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் இன்று சென்னையில் நடைபெறும். படப்பிடிப்பு மற்றும் பாடல் பதிவு, எடிட்டிங் டப்பிங் ஆகியவை நடைபெறாது என்பதை தெரிவித்து கொள்கிறோம். 23-11-16 அன்று நடைபெற்ற செயற்குழுவில் எடுத்த முடிவு இது. இது குறித்து அனைத்து சங்கங்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#PCSriram #GSiva #FEFSI #Remo #SivaKarthikeyan #24AMStudios #FefsiUnionStrike

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

Mr லோக்கல் டீஸர்


;