பிரேக்கிங் நியூஸ்: 3வது முறையாக விஜய் Vs விஷால்!

விஜய்யின் ‘பைரவா’ படத்தைத் தொடர்ந்து விஷாலின் ‘கத்தி சண்டை’ படமும் 2017 பொங்கலுக்கு ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 23-Nov-2016 5:53 PM IST Chandru கருத்துக்கள்

‘சகலகலா வல்லவன் அப்பாடக்கர்’ படத்தைத் தொடர்ந்து சுராஜ் இயக்கியிருக்கும் படம் ‘கத்தி சண்டை’. விஷால், தமன்னா நாயகன் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் காமெடிக்காக கைகோர்த்திருக்கிறது வடிவேலு, சூரி கூட்டணி. இப்படம் முதலில் நவம்பர் 11ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் கறுப்புப்பண விவாகரத்திற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் ஏற்பட்டு பணத்தட்டுப்பாடு காரணமாக, மக்கள் தியேட்டர்களுக்கு வருவது குறைந்தது. இதனால் பல படங்களின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டன. அதில் ‘கத்தி சண்டை’யும் ஒன்று. டிசம்பரில் இப்படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த சூழலில், தற்போது ‘கத்தி சண்டை’ படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்யவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

ஏற்கெனவே விஜய் படத்துடன் விஷால் படம் இரண்டுமுறை ரிலீஸ் ஆகி போட்டியிட்டுள்ளன. 2007ஆம் ஆண்டு பொங்கல் சமயத்தில் விஜய்யின் ‘போக்கிரி’ படமும், விஷாலின் ‘தாமிரபரணி’ படமும் மோதின. அதேபோல், 2014ஆம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 22ஆம் தேதி விஜய்யின் ‘கத்தி’ படமும், விஷாலின் ‘பூஜை’ படமும் மோதின. அதனைத் தொடர்ந்து தற்போது 3வது முறையாக 2017ஆம் ஆண்டு பொங்கலை முன்னிட்டு விஜய்யின் ‘பைரவா’ படமும், விஷாலின் ‘கத்தி சண்டை’ படமும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;