கமர்ஷியலாக உருவாக்கிய ‘பாயும் புலி’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காத நிலையில், மீண்டும் தனது யதார்த்த பாணிக்குத் திரும்பியிருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன். 80களில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை அடிப்படையாக வைத்து அவர் இயக்கியிருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தில் விஷ்ணு விஷால், ஸ்ரீதிவ்யா, பார்த்திபன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் டீஸர், டிரைலர், இமானின் பாடல்கள் ஆகியவற்றிற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வந்த நிலையில், இன்று இப்படம் சென்சார் அதிகாரிகளுக்கு திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது. படம் பார்த்த அதிகாரிகள், படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கி அனைத்தத்தரப்பினரும் பார்க்க அனுமதி வழங்கியுள்ளனர்.
நல்லுசாமி பிக்சர்ஸ், ஏசியன் சினி கம்பைன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் ‘மாவீரன் கிட்டு’ படத்தை வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கின்றனராம்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்ஷமண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம்...