ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ படம் பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்கள்!

ஜீவாவின் ‘கவலை வேண்டாம்’ படம் பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்கள்!

செய்திகள் 23-Nov-2016 1:51 PM IST Chandru கருத்துக்கள்

‘யாமிருக்க பயமே’ படத்தைத் தொடர்ந்து இயக்குனர் டீகே-யின் இரண்டாவது படமாக உருவாகியிருக்கிறது ‘கவலை வேண்டாம்’. பாபி சிம்ஹா, சுனைனா, ஆர்.ஜே.பாலாஜி உட்பட முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்திருக்கும் இப்படம் பற்றிய 5 சுவாரஸ்ய தகவல்கள்

1. தமிழ் சினிமாவின் வழக்கமான கதாபாத்திர வடிவமைப்புகளைப் பின்பற்றாமல் கொஞ்சம் வித்தியாசமாகவும், புதிததாகவும் இப்படத்தில் கேரக்டர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்களாம். குறிப்பாக இப்படத்தில் வில்லன் கதாபாத்திரமே கிடையாது என்றிருக்கிறார் இயக்குனர் டீகே.

2. இதுவரை வெளிவந்துள்ள 2 டீஸர்களிலுமே இளசுகளை குறிவைத்து ‘அடல்ட் காமெடி’ காட்சிகளை வெளியிட்டிருந்தாலும், ‘கவலை வேண்டாம்’ படம் குடும்பத்துடன் பார்க்கும் வகையில் பொழுதுபோக்கு படமாகவே இருக்குமாம்.

3. லியோ ஜேம்ஸ் இசையமைப்பில் வெளிவந்துள்ள ‘கவலை வேண்டாம்’ பட ஆல்பம் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளது. குறிப்பாக ‘என் பல்ஸ் ஏத்திட்டு போறியே’ பாடல் ‘யூத்’களின் ஃபேவரைட் பாடலாக அமைந்துள்ளது.

4. கோ, என்றென்றும் புன்னகை படங்களின் வரிசையில் ஜீவாவிற்கு இந்த ‘கவலை வேண்டாம்’ படமும் ‘ஏ’ சென்டர் ஆடியன்ஸிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுத்தரும் என்கிறார்கள். அதோடு ஜீவாவுடன் முதல்முறையாக காஜல் அகர்வால் இணைந்து நடித்திருப்பதும் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

5. அபிநாதன் ராமானுஜனின் கலர்ஃபுல் ஒளிப்பதிவும், கண்ணைக் கவரும் படப்பிடிப்புத்தளங்களும் ‘கவலை வேண்டாம்’ படத்தின் பெரிய பலமாக இருக்கும் என்பதை டீஸர்கள் பறைசாற்றுகின்றன. நிச்சயமாக பெரிய திரையில் இப்படத்தை கண்டுகளிப்பதற்கு மேற்படி விஷயங்கள் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதையும் மறுப்பதற்கில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;