மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் இறுதி சடங்கு குறித்த தகவல்!

மறைந்த இயக்குனர் கே.சுபாஷின் உடலுக்கு திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி!

செய்திகள் 23-Nov-2016 1:51 PM IST RM கருத்துக்கள்

இன்று காலை சென்னையில் காலமான இயக்குனர் கே.சுபாஷின் உடல் சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகில் உள்ள கோலவிழியம்மன் கோவில் தெருவில் இருக்கும் அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. கே.சுபாஷின் உடலுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவரது இறுதி சடங்கு நாளை பகல் 11 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள மின் மயானத்தில் நடைபெறவிருக்கிறது. சிறுநீரக கோளாறு மற்றும் இதய நோய் காரணமாக இறந்துவிட்ட கே.சுபாஷ் பிரபல இயக்குனர்களாக விளங்கிய கிருஷ்ணன் – பஞ்சுவில் கிருஷ்ணனின் மகன் ஆவார்! 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய சுபாஷுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களின் பெயர் தனுஜா, புனிதா. மனைவியின் பெயர் சுஜா சுபாஷ்! கணவரை, தந்தையை இழந்து தவிக்கும் சுபாஷ் குடும்பத்தினருக்கு ‘டாப்10சினிமா’ தனது ஆழந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;