நட்டி நட்ராஜின் ‘போங்கு’ சென்சார் ரிசல்ட்?

கார் திருட்டு கும்பல பற்றிய ‘போங்கு’விற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட்!

செய்திகள் 23-Nov-2016 11:21 AM IST VRC கருத்துக்கள்

‘நட்டி’ நட்ராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘எங்கிட்ட மோதாதே’ திரைப்படம் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த படம் தவிர நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ள மற்றொரு படம் ‘போங்கு’. விலை உயர்ந்த கார்களை ‘ஹைடெக்’ ஆக திருடும் நான்கு பேரை பற்றிய அதிரடி ஆக்‌ஷன் கதை இது. கலை இயக்குனர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணிபுரிந்த தாஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். அனைத்து வேலைகளும் முடிவடைந்த இப்படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. இதனையொட்டி இப்படத்தின் சென்சார் காட்சி நேற்று நடைபெற்றது. ‘போங்கு’வை பார்த்த சென்சார் குழு உறுப்பினர்கள் படத்திற்கு ‘யு’ சர்டிஃபிக்கெட் வழங்கியிருக்கிறார்கள். ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட் பட நிறுவனம் சார்பாக திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்க, மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போங்கு - டிரைலர்


;