பிரபு நடித்த ‘கலியுகம்’, உத்தம புருஷன், விஜயகாந்த் நடித்த ‘சத்ரியன்’, அஜித் நடித்த ‘நேசம்’, ’பவித்ரா’ பிரபு தேவா நடித்த ‘ஏழையின் சிரிப்பில்’, பார்த்திபன் நடித்த ‘அபிமன்யு’ உட்பட பல படங்களை இயக்கியவர் கே.சுபாஷ். இவர் உடல் நலக்குறைவால் சமீபத்தில் சென்னை வடபழனியிலுள்ள எ.ஆர்.எம்.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை கே.சுபாஷ் திடீரென்று காலமானார். அவருக்கு வயது 57. இயக்குனர் மணிரத்னத்திடம் ‘நாயகன்’ படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த கே.சுபாஷ் இயக்கிய முதல் படம் ‘கலியுகம்’. இதனை தொடர்ந்து இவர் இயக்கிய ‘சத்ரியன்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டாக ஓடி அனைவராலும் பேசப்பட்ட படமாகும். படங்களை இயக்கி வந்ததோடு சில படங்களுக்கு இவர் கதையும் எழுதியுள்ளார். அதில் ஷாருக்கான் நடித்து சூப்பர் ஹிட் படமாக அமைந்த ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிந்தி படமும் ஒன்று! தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க சில படங்களை இயக்கிய கே.சுபாஷின் திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் மிகுந்த வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இவரது இறுதி சடங்கு இன்று மாலை 4.30 மணி அளவில் சென்னையில் நடைபெறவிருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனமும் ‘விவேகானந்தா...
நேமிசந்த் ஜபக் தயாரிக்க அறிமுக இயக்குனர் A.C.முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா நடிக்கும் படம்...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...