அஜித்துடன் நடிப்பது பற்றி அக்ஷரா, விவேக் ஓபராய் என்ன சொல்கிறார்கள்?

‘ஏகே 57’ படத்திற்காக பல்கேரியாவில் நடைபெறும் படப்பிடிப்பில் அஜித்துடன் அக்ஷரா ஹாசனும், விவேக் ஓபராயும் கலந்து கொண்டுள்ளனர்

செய்திகள் 23-Nov-2016 10:38 AM IST Chandru கருத்துக்கள்

சிவா இயக்கத்தில் ‘தல’ அஜித் நடித்துவரும் ‘ஏகே 57’ படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட்டில் பல்கேரியாவில் துவங்கியது. முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே நகரும் கதைக்களத்தை இப்படத்திற்காக அமைத்துள்ளதால் பல்கேரியாவைத் தொடர்ந்து ஸ்வேனியாவில் படப்பிடிப்பு தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்திலுள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் முக்கிய சண்டைக்காட்சிகள் சிலவற்றை செட் அமைத்து படமாக்கினார்கள். தற்போது மீண்டும் பல்கேரியா சென்று படப்பிடிப்பு நடத்தி வருகிறது ‘ஏகே 57’ டீம். முதல்முறையாக அஜித்துடன் இந்த ஷெட்யூலில் நடிகை அக்ஷரா ஹாசனும், நடிகர் விவேக் ஓபராயும் கலந்து கொண்டுள்ளனர்.

அஜித்துடன் நடிப்பது பற்றி குறிப்பிட்ட அக்ஷரா ஹாசன், ‘‘அற்புதமான நடிகர் மட்டுமின்றி, அவர் உண்மையான மனிதரும் கூட. அவருடன் நடிப்பது என் அதிர்ஷ்டம்’’ என்று ட்வீட் செய்துள்ளார். அதேபோல், பாலிவுட் மீடியா ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டியளித்த விவேக் ஓபராய், ‘‘நான் மீண்டுமொரு தமிழ் படத்தில் நடிக்கிறேன். அதுவும் முதன்முதலாக சூப்பர்ஸ்டார் அஜித்துடன். நான் அவரை அஜித் அண்ணா என்றுதான் அழைக்கிறேன். இப்படத்தில் அஜித்துடன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்... நினைக்கும்போதே உற்சாகமாக இருக்கிறது!’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை டிரைலர்


;