புகழ்பெற்ற இசைக்கலைஞரான பால முரளி கிருஷ்ணா (வயது 86) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று சென்னையில் இயற்கை எய்தினார். இசைத்துறையில் பல்வேறு சாதனைகளைப் படைத்து, விருதுகளை வென்ற பால முரளி கிருஷ்ணாவின் மறைவையொட்டி, திரைத்துறையைச் சேர்ந்த பலரும் அஞ்சலி செலுத்து வருகின்றனர். தான் நடித்த படத்தில், தன் காட்சிகளுக்கு பின்னணி பாடிய பால முரளி கிருஷ்ணாவின் மறைவு குறித்து இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் சிவகுமார், அவரைப் பற்றிய நினைவுகளை குறித்து அஞ்சலி செலுத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் உள்ள விவரங்கள் கீழே...
பால முரளி கிருஷ்ணா அவர்கள் கர்நாடக சங்கீதத்தில் ஒரு பீஷ்மர் என்று சொல்லலாம். அகில இந்திய அளவில் உயரிய மத்திய அரசு விருதுகளை வாங்கியுள்ளார். அப்படி பட்ட மனிதர் சினிமாவுக்கு வருவதை விரும்பமாட்டார்கள். ஆனால் அதையும் தாண்டி அந்த மாமனிதர் அருட்செல்வர் A.P.நாகராஜன் அவர்களின் வேண்டும்கோள் ஏற்று, திருவிளையாடல் படத்தில் T.S. பாலையா அவர்களுக்கு ”ஒரு நாள் போதும்மா இன்று ஒரு நாள் போதும்மா” என்ற பாடலை பாடினார். அந்த படம் வெற்றி படமாக ஓடியதற்கு அந்த பாடல் 25% சதவிகிதம் காரணமாக அமைந்தது. ஏன் என்றால் மாறுபட்ட குரல் மேலும் T.S.பாலையாவின் நடிப்பு. அதன் பிறகு அவர் வேறு நடிகர்களுக்கு டூயட் பாடியதாக எனக்கு ஞாபகம் இல்லை. ஆனால் இளையராஜா இசையில் கவிகுயில் படத்தில் எனக்காக அவர் பாடினார். சிக்மகளூர் அதிகாலை 3 மணியளவில் முடுகர என்னும் இடத்தில் நானும், ஸ்ரீதேவியும் கிருஷ்ணார், ராதா வேடத்தில் நடித்தோம். அந்த பாடல் ”சின்ன கண்ணன் அழைகிறான்” என்கிற பாடல் காட்சிகள் எடுத்தோம். அந்த பாடல் தமிழ்சினிமா ராசிகர்கள் அனைவரும் மறக்க முடியாத பாடல். அந்த மாமனிதர் எனக்காக பாடினார் அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன்.
#BalaMuralikrishna #KarnatikSinger #Tamil #Telugu #Kannadam #Rajinikanth #Kamal Haasan
ஜித்து ஜோசஃப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ், சௌகார் ஜானகி, நிகிலா விமல், ஆன்சனபால், இளவரசு,...
தமிழகத்தில் சமீபத்தில் வீசிய கஜா புயலால் நாகை, தஞ்சாவூர், தஞ்சை உட்பட பல மாவட்டங்கள் பெரும்...
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், கலை இலக்கியம், நாடகம் மற்றும் சினிமா துறையில் பிரபலமாக...