10 வருடங்களுக்குப் பிறகு.... நாளை மீண்டும் செல்வா - யுவன் மேஜிக்!

‘புதுப்பேட்டை’ ஆல்பம் வெளிவந்து கிட்டத்தட்ட 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அதே கூட்டணியின் அடுத்த ஆல்பம் ரிலீஸ் ஆகிறது

செய்திகள் 23-Nov-2016 10:07 AM IST Chandru கருத்துக்கள்

வெற்றி, தோல்வி என்பதையெல்லாம் தாண்டி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பிடித்த படங்கள் என்றொரு பட்டியலை எடுத்துக்கொண்டால், அதில் செல்வராகவனின் ‘புதுப்பேட்டை’ படத்திற்கு தனியொரு இடம் நிச்சயம் உண்டு. 2006ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தின் வரவேற்புக்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்று யுவன் ஷங்கர் ராஜாவின் சூப்பர்ஹிட் பாடல்களும், மிரட்டலான பின்னணி இசையும். 2005ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி ‘புதுப்பேட்டை’ படத்தின் பாடல்கள் வெளிவந்தன. இப்படத்திற்குப் பிறகு செல்வா இயக்கிய படங்களுக்கு யுவன் இசையமைக்கவில்லை. இதே கூட்டணி தற்போது 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்திற்காக இணைந்திருக்கிறது. இப்படத்தின் பாடல்களை நாளை வெளியிடவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

செல்வாவின் முதல் 4 படங்களுக்குமே சூப்பர்ஹிட் பாடல்களைத் தந்தவர் யுவன். இதனால் ரசிகர்கள் மத்தியில் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ பாடல்களுக்கு எக்கச்சக்க எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. போதாக்குறைக்கு... இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ‘என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...’ பாடல் ஏற்கெனவே வைரல் ஹிட்டாகியிருக்கிறது. அதோடு, இப்படத்தில் நடிகர் தனுஷும் பாடல் ஒன்றைப் பாடியிருப்பதால், தனுஷின் ரசிகர்களும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ ஆல்பத்திற்காக வெயிட்டிங்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;