இசை கலைஞர் டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா காலமானார்!

பிரபல கர்நாடக இசைப் பாடகர் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா காலாமானார்!

செய்திகள் 22-Nov-2016 5:30 PM IST VRC கருத்துக்கள்

பிரபல கர்நாடக இசைப் பாடகர் பாலமுரளி கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 86. கர்நாடக இசையில் வல்லுனரான இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உட்பட பல மொழிப் படங்களுக்காக பாடல்களை பாடவும் செய்திருக்கிறார், இசை அமைக்கவும் செய்துள்ளார். ஒரு சில திரைப்படங்களில் நடிக்கவும் செய்துள்ளார். இசைத் துறையில் இவர் ஆற்றிய பெரும் பணிகளுக்காக இவருக்கு மத்திய அரசு பத்ம விபூஷன், பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளது. இந்த விருதுகள் தவிர சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசை அமைப்பாளருக்கான விருது உட்பட பல விருதுகள் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்தவர் பாலமுரளி கிருஷ்ணா. இவரது தந்தையும் இசை துறையில் பிரபல புல்லாங்குழல் வாசிப்பாளரக திகழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இசை துறையில் பல அரிய சாதனைகள் புரிந்த டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் மறைவு இசை துறைக்கு பெரும் இழப்பாகும்.

#BalaMuralikrishna #KarnatikSinger #Tamil #Telugu #Kannadam #Rajinikanth #Kamal Haasan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தம்பி டீஸர்


;