காரைக்குடியில் சூர்யாவின் ‘தானா சேர்ந்த கூட்டம்’

சென்னையை தொடர்ந்து காரைக்குடிக்கு சென்ற தனா சேர்ந்த கூட்டம்!

செய்திகள் 22-Nov-2016 11:52 AM IST VRC கருத்துக்கள்

‘சிங்கம்-3’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு சென்னையில் நடந்து முடிந்தது. இரண்டாவது கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் இன்று துவங்கியது. காரைக்குடியின் தென் பகுதிகளில் நடைபெறும் இந்த படப்பிடிப்பு தொடர்ந்து ஒரு வாரம் நடக்கவிருக்கிறது. விக்னேஷ் சிவன் இயக்கும் இப்படத்தில் சூர்யாவுடன் கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படம் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் மூன்றாவது படமாகும். இப்படம் ஹிந்தியில் வெளியாகி வெற்றிபெற்ற ‘ஸ்பெஷல்-26’ படத்தின் ரீ-மேக் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் இதனை அப்பட்டமாக மறுத்துள்ளனர் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினர்!

#Singam3 #Suriya #VigneshShivan #ThaanaSernthaKoottam #PodaPodi #NaanumRowdyDhaan #Anirudh #StudioGreen #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மகளிர் மட்டும் - அடி வாடி திமிரா பாடல்


;