‘வட சென்னை’யில் விக்ரம்?

‘இருமுகன்’ படத்தைத் தொடர்ந்து விக்ரம் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்த தகவல்கள்

செய்திகள் 22-Nov-2016 10:20 AM IST Chandru கருத்துக்கள்

‘இருமுகன்’ தந்த உற்சாகத்தில் முகம் நிறைய புன்னகையுடன் வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகர் விக்ரம். இப்படத்தைத் தொடர்ந்து ‘டோன்ட் ப்ரீத்’ ஹாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்கில் விக்ரம் என்ற பேச்சுக்கள் ஒருபுறமிரும் சுற்றிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் ‘வாலு’ விஜய சந்தர் இயக்கத்தில் விக்ரம் நாயகனாக நடிக்கிறார் என சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள், டெக்னீஷியன்கள் பற்றிய விவரம் எதுவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. இப்படம் குறித்து விசாரித்தவரை நமக்குக் கிடைத்த தகவலை இங்கே பகிர்கிறோம்.

இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் ‘பிரேமம்’ சாய் பல்லவியும், இயக்குனர் சமுத்திரக்கனியும் முக்கிய வேடங்களில் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, இந்த ஆக்ஷன் த்ரில்லருக்கான கதைக்களத்தை வடசென்னையை மையமாக வைத்து உருவாக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் வடசென்னையில நடக்கும் எனத் தெரிகிறது. டிசம்பர் இறுதியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்குமாம்.

#Vikram #Irumugan #VijayChander #SaiPallavi #Premam #Vaalu #STR #DontBreathe #Chiyaan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா ட்ரைலர்


;