‘விஐபி 2’வுடன் சேர்த்து அரை டஜன் படங்களில் அமலா பால்!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஒரே நேரத்தில் 6க்கும் மேற்பட்ட படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் அமலா பால்

செய்திகள் 22-Nov-2016 10:11 AM IST Chandru கருத்துக்கள்

விவாகரத்து அறிவிறிப்பிற்குப் பின்னர் அமலா பாலின் எதிர்காலத்தைப் பற்றி பலரும் ஆச்சரியமாக பேசிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் தனக்கான சக்சஸ் பாதையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார் ‘மைனா’ நடிகை. விமர்சனரீதியாக தனக்கு நல்ல பெயரை வாங்கித்தந்த ‘அம்மா கணக்கு’ படத்திற்குப் பின்னர் ‘திருட்டு பயலே’ 2ஆம் பாகம் மற்றும் வெற்றிமாறன், தனுஷின் ‘வட சென்னை’ படங்களில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமானார் அமலா பால்.

தற்போது, தனுஷுடன் மேலும் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார் அமலா. லேட்டஸ்ட்டாக அறிவிக்கப்பட்ட ‘வேலையில்லா பட்டதாரி’ 2ஆம் பாகத்திலும் முக்கிய வேடமொன்றில் அமலா பால் நடிக்கவிருக்கிறார். அதோடு, கன்னடத்தில் சுதீப்பிற்கு நாயகியாக ‘ஹெப்புலி’ என்ற படத்திலும் அமலா பால் நடித்து வருகிறார். இது அமலா பாலின் கன்னட அறிமுகப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த 4 படங்கள் தவிர தெலுங்கில் 2 படங்கள், மலையாளத்தில் ஒரு படம் என ஒரே நேரத்தில் அரை டஜனுக்கும் மேற்பட்ட படங்களில் பிஸியாக இருக்கிறார் அமலா பால்.

#AmalaPaul #VIP2 #Dhanush #PowerPandi #AmmaKanakku #ThiruttuPayale2 #VadaChennai #VIP

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;