தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து நடித்து வந்த நயன்தாரா, ‘மாயா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, தனக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள கதைகளை தேடித் தேடி கேட்டுக் கொண்டிருந்தார். அதில் சில கதைகள் அவரை இம்ப்ரஸ் செய்யவே, வரிசையாக நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள 3 படங்களை ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். இதுகுறித்து, ‘ஹீரோக்களுக்கு குட்பை... விஜயசாந்தி ஸ்டைலில் நயன்தாரா’ என்றொரு கட்டுரையை இரண்டு நாட்களுக்கு முன்பு நமது இணையதளத்தில் வெளியிட்டிருந்தோம்.
அந்தவகையில் கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’, தாஸ் ராமசாமி இயக்கத்தில் ‘டோரா’, சக்ரி டோலட்டி இயக்கத்தில் ‘கொலையுதிர் காலம்’ ஆகிய 3 படங்களில் நடித்துவரும் நயன்தாராவிடம் இன்னுமொரு நாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள படத்தில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். ‘யாமிருக்க பயமே’, ‘கவலை வேண்டாம்’ போன்ற படங்களை இயக்கியுள்ள டீகே உருவாக்கி வைத்திருக்கும் ஹாரர் த்ரில்லர் கதைக்கான நாயகி வேடத்தில் நடிப்பதற்குதான் நயனிடம் ‘டேட்ஸ்’ கேட்கப்பட்டுள்ளதாம். ஆனால், இந்தப் படத்தை இயக்கவிருப்பது டீகேயிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஒருவராக இருப்பாராம். கதை நயனுக்குப் பிடித்து, அவரின் தேதிகள் மீதமிருக்கும் பட்சத்தில் ஒரே நேரத்தில் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள 4 படங்களில் நடிக்கும் முதல் ஹீரோயினாக நயன்தாரா, எந்த நடிகையும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
#Nayanthara #Aramm #Maya #KolaiyuthirKaalam #Deekay #KavalaiVendaam #YaamirukkaBayame #Nayan
Direction: Priya Krishnaswamy Production: Reckless Roses Cast: R Raju, Sukumar Shanmugam, SP...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...
ஆர்.ஜே.பாலாஜி, என்.ஜே.சரவணனுடன் இணைந்து இயக்கி வந்த ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் அனைத்து...