2016ல் 5வது படத்தை ரிலீஸ் செய்யும் சசிகுமார்?

இந்த வருடம் ஏற்கெனவே தன் நடிப்பில் 4 படங்கள் வெளியாகியிருக்கும் சூழ்நிலையில், ‘பலே வெள்ளையத் தேவா’வையும் ரிலீஸ் செய்ய சசிகுமார் திட்டம்

செய்திகள் 21-Nov-2016 4:32 PM IST Top 10 கருத்துக்கள்

‘கிடாரி’ படத்தைத் தொடர்ந்து சசிகுமார் நடித்திருக்கும் படம் ‘பலே வெள்ளையத் தேவா’. அறிமுக இயக்குனர் சோலை பிரகாஷ் இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். காமெடிப் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் சங்கிலி முருகனும், கோவை சரளாவும் நடித்துள்ளனர். ‘டர்புக்கா’ சிவா இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஒளிப்பதிவு ரவீந்திரநாத் குரு.

பரபரப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 10ஆம் தேதி நிறைவு பெற்றது. தற்போது படத்தின் டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தை டிசம்பர் 23ஆம் தேதி வெளியிட சசிகுமார் திட்டமிட்டு வருவதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்திருக்கிறது. அதேநாளில் ‘போகன்’ படமும் வெளியாகவிருப்பதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிட்டபடி ‘பலே வெள்ளையத் தேவா’ வெளியாகும் பட்சத்தில், இந்த வருடத்தில் சசிகுமாரின் நடிப்பில் வெளிவரும் 5வது படமாக இப்படம் இருக்கும். தாரை தப்பட்டை, வெற்றிவேல், கிடாரி, அப்பா (கெஸ்ட் ரோல்) ஆகிய படங்கள் சசிகுமாரின் நடிப்பில் ஏற்கெனவே இந்த வருடத்தில் வெளியாகியுள்ளன.

#Sasikumar #Kidaari #BalleVellaiyathevaa #SolaiPrakash #DhanyaRavichandran #DarbugaSiva #KovaiSarala #Bogan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;