‘சைத்தான்’ இயக்குனரின் அடுத்த படத்தில் வரலட்சுமி சரத்குமார்!

சிபிராஜ் நடிப்பில் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கி வரும் திரைப்படத்தில் வரலட்சுமி!

செய்திகள் 21-Nov-2016 2:37 PM IST Chandru கருத்துக்கள்

டிசம்பர் 1ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கிறது விஜய் ஆண்டனியின் ‘சைத்தான்’ திரைப்படம். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி. இப்படம் வெளிவருவதற்கு முன்பே தற்போது பெயரிடப்படாத புதிய படமொன்றையும் இயக்கி வருகிறார். சத்யராஜின் நாதாம்பாள் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தில் இன்னொரு நாயகியாக நடிகை வரலட்சுமி சரத்குமாரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இது வரை வரலட்சுமி நடித்த கதாபாத்திரங்களிலிருந்து இது முற்றிலும் மாறுபட்ட கேரக்டராக இருக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

#VijayAntony #Saithan #NathambalFilms #Varalakshmi #Sibiraj #PradeepKrishnamoorthy #Sathyaraj #RamyaNambeesan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரங்கா டீஸர்


;