‘எந்திரன் 3ஆம் பாகமும் வரும்!’’ - இயக்குனர் ஷங்கர் உறுதி

‘எந்திரன்’ 2ஆம் பாகத்தைத் தொடர்ந்து அதன் 3ஆம் பாகமும் வெளிவரும் என இயக்குனர் ஷங்கர் அறிவித்துள்ளார்

செய்திகள் 21-Nov-2016 1:28 PM IST Chandru கருத்துக்கள்

நேற்று மாலை மும்பையில் பிரம்மாண்டமாக நடந்த ‘எந்திரன்’ படத்தின் 2ஆம் பாகமான ‘2.0’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழாவில் பல சுவாரஸ்யமான விஷயங்கள் அரங்கேறின. யாரும் எதிர்பாராத வண்ணம் சல்மான் கான் மேடையேறி அசத்தினார். அதோடு, படம் தீபாவளிக்கு 3டியில் வெளியாகிறது என்ற இன்ப அதிர்ச்சியும் ரசிகர்களுக்கு கிடைத்தது. தவிர, இப்படத்தில் உலகளவில் முதல்முறையாக புதிய ஒலி வடிவமைப்பை ஒன்றை கையாண்டிருப்பதாக ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி தெரிவித்தார்.

அதோடு விழாவில் பேசிய இயக்குனர் ஷங்கர், அறிவியல் சார்ந்த படமென்பதால் ‘2.0’வைத் தொடர்ந்து 3.0, 4.0, 5.0 என உருவாவதற்கான அத்தனை சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரிவித்தார். இதனால் அரங்கில் கரகோஷம் எழுந்தது. ‘இந்த உலகம் மனிதர்களுக்கானது மட்டுமல்ல’ என்ற அர்த்தம் தொணிக்கும் வாசகங்கள் ‘2.0’வின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

#2.0 #Endhiran2 #Rajinikanth #Shankar #AkshayKumar #ARRahman #AmyJackson #LycaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;