3வது முறையாக மாறிய ‘சென்னை 28’ 2வது இன்னிங்ஸின் ரிலீஸ் தேதி!

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சென்னை 28’ 2ஆம் பாகத்திற்கான ரிலீஸ் தேதி மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

செய்திகள் 21-Nov-2016 10:20 AM IST Chandru கருத்துக்கள்

2007ல் வெளிவந்து சூப்பர்ஹிட் வெற்றியைப் பெற்ற ‘சென்னை 28’ படத்தின் 2ஆம் பாகம் அதே டீமால் தற்போது மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இன்னிங்ஸை ஆடிய அதே ஹீரோ, ஹீரோயின்களுடன் சிற்சில புதிய நடிகர்களும் இணைந்து இந்த 2வது இன்னிங்ஸை ஆடியுள்ளனர். இப்படம் முதலில் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், சிற்சில காரணங்களால் நவம்பர் 25க்கு ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. ஆனால், தற்போது நிலவி வரும் பணத்தட்டுப்பாடு பிரச்சனையால் 3வது முறையாக ‘சென்னை 28, 2வது இன்னிங்ஸி’ன் ரிலீஸ் தேதி மாற்றி அறிவித்துள்ளனர்.

ஆனால், இந்தமுறை படம் உறுதியாக ரிலீஸாகும் எனவும் படக்குழுனவரால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி டிசம்பர் 9 என உறுதியாக அறிவித்துள்ளனர். பிளாக் டிக்கெட் கம்பெனி சார்பில் வெங்கட்பிரபு தயாரித்து, இயக்கியிருக்கும் இப்படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைத்துள்ளார்.

#Chennai600028 #VenkatPrabhu #BlackTicketCompany #YuvanShankarRaja #PremgiAmaran #Vaibhav #Jai #Shiva #Vijayalakshmi #NithinSathya #VijayVasanth

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;