2014ஆம் ஆண்டு அரை டஜன் படங்களில் நடித்த விமல், அதன் பிறகு மொத்தமே 3 படங்களில்தான் நடித்திருக்கிறார். அதில் இந்த வருடம் வெளிவந்த அஞ்சல, மாப்ள சிங்கம் ஆகிய படங்களும் அடங்கும். அதோடு, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விமல் நடித்திருக்கும் ‘ரெண்டாவது படமு’ம் நீண்டநாட்களாக வெளியாகாமல் இருக்கிறது. தற்போது பூபதி பாண்டியன் இயக்கத்தில் ‘மன்னார் வகையறா’ படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விமல். இதுதவிர, சுசீந்திரன் தயாரிப்பில், அவரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி சிவா இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்கிறார் விமல். பாண்டிராஜ் வசனமெழுதும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க, விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படங்கள் தவிர ‘ராஜதந்திரம்’ படத்தை இயக்கிய அமித் இயக்கத்திலும் புதிய படமொன்றில் நடிக்கவிருக்கிறார் விமல்.
2014ஆம் ஆண்டைப் போல 2017ஆம் ஆண்டு விமலுக்கு நிறைய படங்கள் ரிலீஸாவதற்கு வாய்ப்புள்ளது.
#Vimal #Suseenthiran #MannarVagaiyara #BoopathyPandian #DImman #VijayMilton #Pandiraj #Rajathanthiram #Amit
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சென்ற வாரம் ‘டகால்டி’, ‘நாடோடிகள்-2’, ‘ உற்றான்’, ‘மாயநதி’ ஆகிய நான்கு நேரடித்தமிழ் படங்கள்...
‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ ஆகிய படங்களை தொடர்ந்து லக்ஷமண் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி நடிக்கும் படம்...