பிரேக்கிங் நியூஸ்: ‘2.0’வின் 3டி தீபாவளி!

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘2.0’ படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் 21-Nov-2016 10:01 AM IST Chandru கருத்துக்கள்

நேற்றைய தினம் மும்பை முழுக்க ஒரே பேச்சு... அது சூப்பர்ஸ்டார் ரஜினியின் ‘2.0’ படம் குறித்ததுதான். ஷங்கர் இயக்கத்தில் இந்தியாவிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவாகிவரும் ‘எந்திரன்’ 2ஆம் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு நேற்று பிரம்மாண்டமாக மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில் இயக்குனர் ஷங்கர், சூப்பர்ஸ்டார் ரஜினி, அக்ஷய்குமார், எமி ஜாக்சன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உட்பட படத்தின் முக்கிய டெக்னீஷியன்கள் அனைவரும் கலந்து கொண்டனர். விழாவை பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். சிறப்பு விருந்தினராக பாலிவுட்டின் வசூல் மன்னன் சல்மான் கான் கலந்து கொண்டார்.

‘2.0’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டிற்குப் பிறகு பேசிய இயக்குனர் ஷங்கர், ‘‘எந்திரனைவிட பத்து மடங்கு கடின உழைப்பில் 2.0 உருவாகி வருவதாக குறிப்பிட்டார்’’. இப்படம் தீபாவளியன்று திரைக்கு வரும் என ஏற்கெனவே செய்தி வந்த வண்ணமிருந்தாலும், அதிகாரபூர்வமாக நேற்றுதான் அறிவிக்கப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே 3Diwali 2017 என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், 2017ஆம் ஆண்டு இந்திய சினிமா ரசிகர்களுக்கு 3டி தீபாவளியாக அமையவிருக்கிறது.

#2.0 #Endhiran2 #Rajinikanth #Shankar #AkshayKumar #ARRahman #AmyJackson #LycaProduction

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;