இந்த சாதனையை செய்த முதல் ஹீரோ விஜய்தான்!

நடிகர் விஜய்யின் ‘பைரவா’ பட டீஸர் புதிய சாதனை!

செய்திகள் 19-Nov-2016 2:02 PM IST Chandru கருத்துக்கள்

தென்னிந்திய சினிமா டீஸர், டிரைலர்களைப் பொறுத்தவரை முதன்முதலில் 1 கோடி பார்வையிடல்களைக் கடந்த டீஸர் என்ற சாதனையைப் படைத்தது ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ‘ஐ’ பட டீஸர். அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய்யின் ‘தெறி’ பட டீஸரும் 1 கோடி பார்வையிடல்களைக் கடந்து யு டயூபில் சாதனை படைத்தது. பின்னர், ‘பாகுபலி’ படத்தின் தெலுங்கு டிரைலர் ஒரு கோடி பார்வையிடல்களைக் கடந்து சாதனை புரிந்தது. அதன்பிறகு சூப்பர்ஸடாரின் ‘கபாலி’ பட டீஸர் முதன்முலாக 3 கோடியை எட்டி இந்திய சினிமா டீஸர் என்ற சாதனையைப் படைத்தது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை, 1 கோடி பார்வையிடல்களைக் கடந்த டீஸர்களின் ஹீரோக்களாக விக்ரம், விஜய், சூப்பர்ஸ்டார் ரஜினி மட்டுமே தற்போது இருக்கிறார்கள். இந்நிலையில், நடிகர் விஜய்யின் ‘பைரவா’ பட டீஸர் தற்போது 1 கோடி பார்வையிடல்களைக் கடந்திருப்பதையடுத்து, இரண்டாவது முறையாக 1 கோடி பார்வையிடல்களைப் பெற்ற நாயகன் என்ற சாதனையைப் புரிந்திருக்கிறார் விஜய்.

#Vijay #Theri #Bairavaa #I #Vikram #Shankar #Kabali #Rajinikanth #Baahubali #Ilayathalapthy #KeerthySuresh

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;