அதர்வாவை தொடர்ந்து விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷ்!

அதர்வாவை தொடர்ந்து விஜய்சேதுபதி, ஜி.வி.பிரகாஷை இயக்கும் ஈட்டி இயக்குனர்!

செய்திகள் 19-Nov-2016 1:53 PM IST VRC கருத்துக்கள்

அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் ’ஈட்டி’ படத்தை இயக்கிய ரவி அரசு அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் நடிப்பில் ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்கவிருக்கிறது என்றும் தகவலை ஒரு சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தோம். ஆனால் இப்போது கிடைத்த புதிய தகவலின் படி ரவி அரசு, ஜி.வி.பிரகாஷை இயக்குவதற்கு முன்னதாக விஜய்சேதுபதி நடிப்பில் ஒரு படத்தை இயக்க முடிவு செய்துள்ளாராம். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது என்றும் இந்த படம் முடிந்த பிறகே ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் பட வேலைகள் துவங்குமாம். விஜய்சேதுபதிக்காக ரவி அரசு உருவாக்கியிருப்பது விறுவிறுப்பான ஒரு ஆக்‌ஷன் கதையாம்! இப்படம் குறித்த மேலும் தகவல்களுடன் கூடிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#RaviArasu #Eetti #AtharvaaMurali #SriDivya #GVPrakash #VijaySethupathi #Ravi #GVP

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;