2012ல் வெளிவந்த ‘போடா போடி’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். அப்போது அவரது வயது 27. அப்படியே.... சூர்யாவின் ‘காக்க காக்க’ படம் வந்த சமயத்திற்கு கொஞ்சம் பின்னோக்கிச் சென்றோமேயானால், விக்னேஷ் சிவன் பேக்கோடு சுற்றிக்கொண்டிருக்கும் மாணவப் பருவம். ‘காக்க காக்க’ படத்தை தான் இளைஞனாக பார்த்த அனுபவத்தை, இன்று அவரையே ஹீரோவாக்கி தான் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு சமயத்தில் நினைவுகூர்ந்து சுவாரஸ்ய ட்வீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.
‘‘ஒரு சமயம் ஸ்கூல் பேக்கோடு ‘காக்க காக்க’ படம் பார்த்தேன்... இன்று, சூர்யா சாருக்கு, ‘ஆக்ஷன்...’ சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த கனவு நினைவேறுமென நினைத்துகூடப் பார்த்ததில்லை. கடவுள் சிறந்தவர்!’’ என்று விக்னேஷ் சிவன் ட்வீட் செய்ய, அதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகர் சூர்யா,
‘‘ஹா... ஹா...! முதல் நாள் படப்பிடிப்பை வெகுவாக ரசித்தேன் இயக்குனர். Guys.... இந்த சின்னப் பையனுக்கு நிறையவே தெரிந்திருக்கிறது!’’ என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி விக்னேஷ் சிவனை பாராட்டியிருக்கிறார்.
இளமையும், அனுபவமும் கைகோர்க்கும் போது நிச்சயம் ஒரு நல்ல படைப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும் என்பதன் அறிகுறியையே இது காட்டுகிறது.
‘தானா சேர்ந்த கூட்டம்’ படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்!
#Suriya #Suriya35 #TSK #ThaanaSernthaKoottam #VigneshShivan #KeerthySuresh #StudioGreen #Anirudh #NRD #NaanumRowdyDhan
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘சூரரைப் போற்று’. இந்த படத்தின் பாடல் ஒன்ற சமீபத்தில்...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...