லொகேஷன் தேடுதல் வேட்டையில் த்ரிஷாவின் கர்ஜனை!

த்ரிஷாவின் கர்ஜனை – லொகேஷன் தேடுதல் வேட்டையில் படக்குழுவினர்!

செய்திகள் 19-Nov-2016 12:59 PM IST VRC கருத்துக்கள்

தனுஷுடன் ‘கொடி’யில் வித்தியாசமான கேரக்டரில் நடித்து பெயர் வாங்கிய த்ரிஷா அடுத்து ‘சதுரங்கவேட்டை-2’, ‘கர்ஜனை’ முதலான படங்களில் நடிக்கிறார். இதில் ‘சதுரங்கவேட்டை-2’வின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் அரவிந்த்சாமியுடன் கதாநாயகியாக நடிக்கிறார் த்ரிஷா! ‘கர்ஜனை’ ஹிந்தியில் அனுஷ்கா சர்மா நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற ‘NH10’ படத்தின் ரீ-மேக் என்று கூறப்படுகிறது. இதில் த்ரிஷாவுடன் அமித் பார்கவ் கதையின் நாயகனாக நடிக்க இருக்கிறார். ரோட் மூவியான இப்படத்திற்கான லொகேஷன் தேர்வு தற்போது நடந்து வருகிறது என்றும் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறப்படுகிறது. மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடித்து முடித்துள்ள ‘மோகினி’யின் இறுதிகட்ட வேலைகள் இப்போது விறுவிறுப்பாக நடந்து வர, இப்படமும் மிக விரைவில் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;