ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ படம் அடுத்த (டிசம்பர்) மாதம் 16- ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரித்துள்ள இப்படத்தின் போஸ்ட் புரொடகஷன் வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைப்பில் வெளியாகவிருக்கும் ‘சிங்கம்-3’யின் பாடல்கள் என்று வெளியாகும் என்பதை ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரும் விதமாக இன்று மாலை 7 மணிக்கு அறிவிக்க இருக்கிறார்கள். இப்படத்தில் சூர்யாவுடன் கதாநாயகிகளாக அனுஷ்கா, ஸ்ருதி ஹாசன் நடிக்க, பிரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் படம் ‘சிங்கம்-3’ என்பது குறிப்பிடத்தக்கது.
#S3 #Suriya #Singam3 #Hari #HarrisJayaraj #StudioGreen #Anushka #ShrutiHaasan #Soori
சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூரரைப் போற்று’ படம் ஏப்ரல் மாதம் வெளியாக இருக்கிறது....
சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா கதையின் நாயகனாக நடித்த படம் ‘கழுகு’. இந்த அடம் வெற்றி பெற்றதை...
‘தனுசு ராசி நேயர்களே’ படத்தை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் ‘தாராள பிரபு’, மற்றும் பெயரிடப்படாத ஒரு படம்...