முதன் முதலாக சுசிகணேசனுடன் இணையும் வித்யா சாகர்!

‘திருட்டுப்பயலே-2’ படத்தி இணையும் வித்யாசாகர்!

செய்திகள் 19-Nov-2016 10:39 AM IST VRC கருத்துக்கள்

சுசி கணேசன் இயக்கும் ‘திருட்டுப் பயலே-2’ படத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா உட்பட பலர் நடிக்கின்றனர்,. முதல் பாகத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ்.என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் இரண்டாம் பாகத்தையும் தயாரிக்கிறது. ‘திருட்டுப் பயலே’ முதல் பாகத்திற்கு பரத்வாஜ் இசை அமைத்திருந்தார். ஆனால் இப்போது இரண்டாம் பாகமாக உருவாகும் ‘திருட்டுப் பயலே’வுக்கு இசை அமைக்கும் பொறுப்பினை வித்யா சாகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மெலடி கலந்த ஐந்து பாடல்கள் இப்படத்தில் இடம் பெறுகிறதாம். அதனால் இந்த படத்திற்கு வித்யாசாகர் மிகவும் பொருத்தமான இசை அமைப்பாளராக இருப்பார் என்பதால அவரை ஒப்பந்தம் செய்துள்ளதாக படத்தின் இயக்குனர் சுசி கணேசன் கூறியுள்ளார். பல ஹிட் பாடல்களை தந்த வித்யா சாகர் சமீபத்தில் வடிவேலு நடித்து வெளியான ‘எலி’ மற்றும் கரண் நடிப்பில் வெளியான ‘உச்சத்துல சிவா’ ஆகிய படங்களுக்கு இசை அமைத்திருந்தார். சுசி கணேசன் இயக்கும் படத்திற்கு வித்யா சாகர் இசை அமைப்பது இது தான் முதல் முறை!

#VidyaSagar #ThiruttuPayale2 #SusiGanesan #BobbySimha #AmalaPaul #Prasanna #Vadivelu #Eli #Karan

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதோ அந்த பறவை போல டீஸர்


;