ஹீரோக்களுக்கு குட்பை.... விஜயசாந்தி ஸ்டைலில் நயன்தாரா!

‘பில்லா 2’ இயக்குனர் சக்ரி டோலட்டி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’

செய்திகள் 18-Nov-2016 5:09 PM IST Chandru கருத்துக்கள்

‘லேடி சூப்பர்ஸ்டார்’ என்ற பட்டத்திற்கு நிச்சயம் பொருத்தமானவர் நடிகை நயன்தாரா என்பதை அவரின் அசுர வளர்ச்சி பறை சாற்றுகிறது. 2010க்குப் பிறகான சிறிய இடைவெளியைத் தொடர்ந்து 2013ல் ‘ராஜா ராணி’ மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நயன்தாரா, அதன் பிறகு குறுகிய காலத்திலேயே உச்சத்திற்குச் சென்றார். ‘நீ எங்கே என் அன்பே’ படத்தின் மூலம் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படத்தில் நடிக்கத் துவங்கிய நயன்தாரா, ‘மாயா’வின் சூப்பர்ஹிட் வெற்றிமூலம் ‘லேடி சூப்பர்ஸ்டாரா’க உருவெடுத்தார். ஒருபுறம் முக்கிய நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டே, இன்னொருபுறம் கொஞ்சம் கொஞ்சமாக தனிக் கதாநாயகியாகவும் உருவெடுத்து வருகிறார் நயன்தாரா.

தற்போது நயன்தாரா நடித்து வரும் 3 படங்களில் 2 படங்கள் நயன்தாரா மட்டுமே முக்கிய கேரக்டரில் நடிக்கும் படங்கள். அதர்வாவுடன் ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் நாயகியாக நடிக்கும் நயன்தாரா, கோபி நயினார் இயக்கத்தில் ‘அறம்’ படத்திலும், தாஸ் ராமசாமி இயக்கத்தில் ‘டோரா’ படத்திலும் ஹீரோ இல்லாத தனியொரு நாயகியாக நடித்து வருகிறார்.

இந்த இரண்டு படங்களைத் தொடர்ந்து தற்போது ‘பில்லா 2’ சக்ரி டோலட்டி இயக்கத்தில் நாயகிக்கு முக்கியத்துவமுள்ள ஒரு படத்தில் மீண்டும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார் நயன்தாரா. ‘கொலையுதிர் காலம்’ எனப்பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை பூஜா ஃபிலிம்ஸ், ஒய்எஸ்ஆர் ஃபிலிம்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசைக்கு யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவுக்கு ராபி, எடிட்டிற்கு ரமேஸ்வர் எஸ் பகத் கூட்டணி அமைத்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவில் இதற்கு முன்பு எந்த ஹீரோயினாவது ஒரே நேரத்தில் ஹீரோ இல்லாத கதாநாயகிக்கு மட்டுமே முக்கியத்துவமுள்ள 3 படங்களில் நடித்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படியொரு சாதனையை தற்போது நிகழ்த்தியிருக்கிறார் நயன்தாரா. 90களில் விஜயசாந்தி இதுபோன்று தனியொரு நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றார். தற்போது அதே ஸ்டைலில் ஹீரோ இல்லாத நாயகிப் படங்களில் நயன்தாரா தொடர்ச்சியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு வருகிறார்.

#Nayanthara #MinjurGopi #Aramm #ChakriToleti #Billa2 #KolaiyudhirKaalam #Ramanathapuram #Dora #Maya #YuvanShankarRaja

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;