விஜய் - அட்லி பட அதிகாரபூர்வ அறிவிப்பு!

விஜய், அட்லி இரண்டாவது முறையாக இணையும் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு!

செய்திகள் 18-Nov-2016 10:45 AM IST VRC கருத்துக்கள்

‘தெறி’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யும், அட்லியும் மீண்டும் ஒரு படத்தில் இணையவிருக்கிறார்கள் என்றும் இந்த படத்தை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ தயாரிக்க இருக்கிறது என்றும் தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம். இந்த படம் குறித்த அதிகார்பூர்வ அறிவிப்பை நேற்று (17-11-16) மாலை ‘ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ்’ நிறுவனத்தினர் வெளியிட்டுள்ளனர். அந்த அறிவிப்பில் படம் குறித்து கூடுதலான விவரங்கள் இடம் பெறவில்லை என்றாலும் விஜய்யை வைத்து அட்லி இயக்கப் போகும் கதை ‘பாகுபலி’ உட்பட பல பெரும் வெற்றிப் படங்களின் கதை ஆசிரியரும், இயக்குனர் ராஜமௌலியின் தந்தையுமான கே.வி.விஜயேந்திர பிரசாத் எழுதியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதைப்போல இப்படத்திற்கு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. விஜய் நடித்து பொங்கலுக்கு வெளியாகவிருக்கும் ’பைரவா’வின் அனைத்து வேலைகளும் முடிந்த பிறகு விஜய் இப்படத்தின் வேலைகளில் இணைவாராம்!

#Vijay #Atlee #Theri #Samantha #SriThenandalFilms #ARRahman #VijayendraPrasad #Samantha #AmyJackson

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பிகில் - ட்ரைலர்


;