‘நீ எங்கே என் அன்பே’, ‘மாயா’வை தொடர்ந்து நயன்தாராவின் ‘அறம்’

நயன்தாரா பிறந்த நாளில் வெளியான படத்தலைப்பு அறம்!

செய்திகள் 18-Nov-2016 10:26 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் கோபி நயனார் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு படத்தில் நடித்து வந்தார் நயன்தாரா. ‘நீ எங்கே என் அன்பே’, ‘மாயா’ போன்று கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் நயன்தாரா, இந்த படத்தில் கலெக்டராக நடித்து வருகிறார். இந்த கேரக்டரை மையப்படுத்தி தான் இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். பெயரிடப்படாமல் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்த இப்படத்திற்கு இப்போது ‘அறம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இன்று நயன்தாரா பிறந்த நாள் என்பதால் அதனையொட்டி படத்தின் டைட்டில் அறிவிப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டிருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்ட பகுதிகளில் இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னை ஏவி.எம்.ஸ்டுடியோவில் நடைபெறவிருக்கிறது. கே.ஜே.ஆர்.ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கோட்பாடி ஜெ.ரமேஷ் தயாரித்து வரும் இப்பட்த்தின் ஒளிப்பதிவை ஓம் பிரகாஷ் கவனிக்கிறார்.

#Aramm #Nayanthara #GopiNayanar #OmPrakash #GopiKrishna #LalgudiNIllayaraja #ArammMovie1stLook #Maya

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காஷ்மோரா - டிரைலர்


;