சூர்யாவை இயக்கும் செல்வராகவன்!

விக்னேஷ் சிவனை தொடர்ந்து செல்வராகவனுடன் கை கோர்க்கும் சூர்யா!

செய்திகள் 18-Nov-2016 10:08 AM IST VRC கருத்துக்கள்

‘சிங்கம்-3’ படப்பிடிப்பை முடித்துக்கொண்ட சூர்யா அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தில் நடிக்கிறார். இது சூர்யாவின் 35-வது படமாகும். இந்த படம் முடிந்ததும் சூர்யா நடிக்கும் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்த படத்தை ‘ஜோக்கர், ‘காஷ்மோரா’ என வரிசையாக வெற்றிப் படங்களை வழங்கி வரும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று (17-11-16) இரவு 9 மணிக்கு வெளியானது. வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சூர்யா, மாறுபட்ட கதைகளை இயக்கி வரும் செல்வராகன் இருவரும் முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு விக்னேஷ் சிவன் இயக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்தும் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்-3’ அடுத்த மாதம் 16-ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

#Suriya #Selvaraghavan #DreamWarriorPictures #SRPrabhu #Singam3 #S3 #VigneshSivan #ThaanaSernthaKootam #Hari #Kaashmora #Joker

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெஞ்சம் மறப்பதில்லை - டிரைலர் 2


;